Press "Enter" to skip to content

இந்தியாவில் யுரேனியம் விற்க கள்ளச்சந்தை? – கவலை எழுப்பும் பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் சட்டவிரோதமாக யுரேனியம் விற்பனை செய்யப்படுவதாக பாகிஸ்தான் மீண்டும் கவலை எழுப்பியுள்ளது.

அணு ஆயுதங்கள் தயாரிப்பதில் யுரேனியம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஆறு கிலோ யுரேனியம் வைத்திருந்து, அதனை விற்பனை செய்ததாக ஜார்கண்ட் மாநிலத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் மற்றும் ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டிருந்தது.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் சயீத் ஹஃபீஸ் சௌத்ரி, “ஆறு கிலோ யுரேனியம் விற்க முயற்சி செய்ததாக சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்தும் அணுசக்தி பொருட்களின் பாதுகாப்பை வலுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் இந்தியா தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவதாக” தெரிவித்தார்.

கடந்த மாதம் மும்பையில் 7 கிலோ யுரேனியம் வைத்திருந்ததாக 2 நபர்களை, இந்தியாவின் தீவிரவாத தடுப்பு அமைப்பான தேசிய புலனாய்வு நிறுவனம் கைது செய்தது.

இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திப்படி, கடந்த ஜுன் 3ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் யுரேனியம் வைத்திருந்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, எழுவரும் சிறைக்கு அனுப்பப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

யுரேனியம்

பட மூலாதாரம், TWITTER /ANI

ஜார்க்கண்டின் பொகாரோ மாவட்டத்தில் சட்டவிரோதமாக “யுரேனியம்” வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக பொகாரோ காவல் கண்காணிப்பாளர் சந்தன் குமார் ஜா தெரிவித்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

யுரேனியம்

பட மூலாதாரம், TWITTER

யுரேனியத்தை கையகப்படுத்தி இந்த கைதை மேற்கொண்ட காவல் துறையினர், இந்த யுரேனியம் யாரிடம் இருந்து வாங்கப்பட்டிருக்கும் என்று சந்தேகப்படும் நபரை இன்னும் கைது செய்யவில்லை.

இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

கள்ளச்சந்தையில் ஐந்து பேர் யுரேனியம் விற்க திட்டமிட்டதாக ஜுன் 2ஆம் தேதி பொகாரோ காவல் துறையினருக்கு துப்பு கிடைத்தது.

பாபி சந்திரா என்பவரிடம் இருந்து யுரேனியம் வாங்கியதாகவும், அதனை விற்க ஆள் தேடி வந்ததாகவும் கைது செய்யப்பட்டவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களின் உதவியோடு, பாபி சந்திராவை காவல் துறையினர் பிடித்தனர். அவரிடம் இருந்து ஒரு ரப்பர் பாக்கெட்டில் தடை செய்யப்பட்ட யுரேனியம் கைப்பற்றப்பட்டது.

பாபியின் உதவியோடு, அனில் சிங் என்பவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

மானா என்றழைக்கப்படும் இஅதிர்ச்சி என்பவரிடம் இருந்து இந்த யுரேனியத்தை பெற்றதாக இவர்கள் இருவரும் தெரிவித்தனர். ஆனால், மானா இன்னும் கைது செய்யப்படவில்லை.

அனில் சிங்கின் கிராமத்தில் இருந்து 4.5 கிலோ எடை கொண்ட இரண்டு யுரேனியம் பாக்கெட்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறுவது என்ன?

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறுவது என்ன?

பட மூலாதாரம், TWITTER

இந்த மாதம் ஜார்கண்ட்டிலும், கடந்த மாதம் இதே போன்று மகாராஷ்டிராவிலும் நடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், இந்தியாவில் இது தொடர்பாக நிலவும் கட்டுப்பாடு, ஒழுங்குமுறை தொடர்பான கவலை ஏற்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் அணுஆயுத பொருட்களுக்கான கள்ளச்சந்தை இயங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

யுரேனியம் விற்பவர்களின் நோக்கம் முதல் அது இறுதியாக யார் கைகளுக்கு செல்கிறது என்பது வரை கண்டறிவது மிக முக்கியமான ஒன்று என அமைச்சர் சயீத் ஹஃபீஸ் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »