Press "Enter" to skip to content

பெகாசஸ் ஸ்பைவேர்: 40 இந்திய பத்திரிக்கையாளர்களின், அமைச்சர்களின் கைபேசி வாக்கு கேட்பு

பட மூலாதாரம், Getty Images

இஸ்ரேலின் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் பத்திரிக்கையாளர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரின் கைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

உலகெங்கிலும் உள்ள சமூக உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் சென்றேன் இஸ்ரேலின் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 40 பத்திரிக்கையாள்கள் உட்படப் பலர் அடங்கியுள்ளனர்.

இருபத்து ஓர் நாடுகளைச் சேர்ந்த 200 பத்திரிக்கையாளர்களின் பெயர்கள் கண்காணிப்பு பட்டியலில் உள்ளது.

பெகாசஸ் என்ற ஸ்பைவேரை உருவாக்கிய என்எஸ்ஓ எனும் இஸ்ரேலிய நிறுவனத்தால் உலகெங்கிலும் கண்காணிப்புக்கு உட்பட்டதாகக் கருதப்படும் 50,000 தொலைபேசி எண்களின் பட்டியல் சகிந்துள்ளது. இந்த பட்டியல் குறித்து புலனாய்வு செய்த பிரான்ஸைச் சேர்ந்த லாபநோக்கற்ற ஊடக நிறுவனமான `ஃபார்பிட்டன் ஸ்டோரிஸ்` முதலில் இந்த செய்தியை வெளியிட்டது.

இந்த பட்டியல் எங்கிருந்து வெளியானது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், தங்கள் நிறுவனம் எந்த தவறும் செய்யவில்லை என என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.

பெகாசஸ்ஸ் பைவேர் ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களைக் கண்காணித்து, அதில் இருக்கும் மேசேஜ்கள், மின்னஞ்சல்கள், தொலைப்பேசி அழைப்புகள் ஆகியவற்றை வாக்கு கேட்கிறது. மேலும் தாக்குதலுக்கு உள்ளான மொபைலின் மைக்ரோபோன்களையும் இதனால் ரகசியமாக இயக்க முடியும்.

பெகாசஸ் ஸ்பைவேர்

பட மூலாதாரம், Getty Images

பெகாசஸ் மென்பொருள் குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், இது நல்ல மனித உரிமை பதிவுகளைக் கொண்ட நாடுகளைச் சேர்ந்த ராணுவம், சட்ட அமலாக்க மற்றும் உளவுத்துறை நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்றும் என்எஸ்ஓ கூறியுள்ளது.

இந்தியாவில் 40 பத்திரிக்கையாளர்கள், மூன்று எதிர்க்கட்சி தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோதி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இரண்டு அமைச்சர்கள் மற்றும் பல தொழிலதிபர்களின் கைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்துஸ்தான் டைம்ஸ், இந்தியா டுடே, நெட்வர்க் 18, தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற செய்தி நிறுவனங்களின் பணியாற்றும் முன்னணி பத்திரிக்கையாளர்கள் கண்காணிக்கப்பட்டதாக தி வயர் கூறுகிறது.

இதுதவிர ஏஃப்பி, சிஎன்என், தி நியூயார்க் டைம்ஸ், அல் ஜசீரா உள்ளிட்ட பல சர்வதேச செய்தி நிறுவனங்களின் பணியாற்றும் செய்தியாளர்களின் செல்போனும் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது.

“உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆதரவாளர்கள் இந்த கண்காணிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது உலகம் முழுவதும் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்பதை இது காட்டுகிறது” என்று ஃபார்பிட்டன் ஸ்டோரிஸின் நிறுவனர் லாரன் ரிச்சர்ட், பிபிசியின் ஷாஷாங்க் சவுகானிடம் தொலைப்பேசியில் தெரிவித்தார்.

பெகாசஸ் ஸ்பைவேர்:

பட மூலாதாரம், Getty Images

கண்காணிப்புக்கு உள்ளானவர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பெகாசஸ் மூலம் 1,400 கைபேசிகளில் சைபர் தாக்குதல் நடத்தியதாகக் கடந்த 2019-ம் ஆண்டு என்எஸ்ஓ நிறுவனத்துக்கு எதிராக வாட்ஸ்ஆப் வழக்கு தொடர்ந்தது.

அந்த நேரத்தில், என்எஸ்ஓ எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்தது, ஆனால் நிறுவனம் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »