Press "Enter" to skip to content

பசுக்களுக்கு அறையில் சிறுநீர் கழிக்க பயிற்சி – பசுங்குடில் வாயு உமிழ்வை குறைக்க புது முயற்சி

பட மூலாதாரம், FBN

பசுக்களுக்கு சிறுநீர் கழிக்க சரியான பயிற்சி கொடுத்தால் அதன் மூலம் பசுங்குடில் வாயு வெளியேற்றம் குறையும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஜெர்மனியில் உள்ள ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் புதிய முயற்சியில் ஈடுபட்டனர். அதாவது, குறிப்பிட்ட சில பசுக்களை அழைத்து வந்து, அவற்றை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறுநீர் கழிக்கும் பகுதிக்கு மேல் நிற்க வைத்து சிறுநீர் கழிக்க பயிற்சி கொடுத்தனர்.

சேகரிக்கப்பட்ட அந்த பசுக்களின் சிறுநீர், மண்ணில் கலக்கும்போது அது பசுங்குடில் நைட்ரஸ் ஆக்சைட் ஆவதை விஞ்ஞானிகளின் ஆயவு கண்டறிந்துள்ளது.

உலக அளவில் மனித செயல்பாடுகளால் வெளியாகும் 10 சதவீத பசுங்குடில் வாயு உமிழ்வு, கால்நடைகளிடம் இருந்தே ஏற்படுகிறது.

இதை அறிந்த ஆய்வாளர்கள் 16 பசுக்களை தேர்வு செய்து அவற்றை விலங்குகள் உயிரியல் நிறுவனத்துக்கு சொந்தமான பண்ணைக்கு அழைத்து வந்தனர். அங்கு இந்த பசுக்கள் சிறுநீர் கழிப்பதற்காக மூலூ என்றழைக்கப்படும் சிறப்பாக வடிவைக்கப்பட்ட சிறுநீர் அறைகளில் அவற்றுக்கு சிறுநீர் போக பயிற்சி கொடுத்தனர்.

இந்த மூலு அமைப்பு, செயற்கை புல்தரை விரிப்பான்களுடன் சிறுநீரை வடிகட்டி உறிஞ்சும் தன்மை வாய்ந்தது.

இந்த மூலூ இடத்துக்கு பசு வந்தால் அதற்கு பிடித்தமான சுவையான பொருள் தருவதாகக் கூறியே ஆராய்ச்சியாளர்கள் 16 பசுக்களுக்கு பயிற்சி கொடுத்தனர். மொத்தம் 10 அமர்வுகளில் இந்த பசுக்களுக்கு பயிற்சி தரப்பட்டது.

‘மூலூ’ செயற்கை புல் தரைக்கு வெளியே சிறுநீர் கழித்தால் பிறகு அந்த பசுக்கள் மீது மூன்று நொடிகளுக்கு தண்ணீர் ஸ்ப்ரே அடிக்கப்படுகிறது. சரியான இடத்தில் சிறுநீர் கழித்தால் அதற்கு பிடித்தமான பொருட்கள் சாப்பிட தரப்படுகிறது. மூன்று கட்டமாக இந்த பயிற்சி வழங்கப்பட்டது. ஒவ்வொரு கட்டத்திலும் பசு சிறுநீர் கழிக்க நடந்து செல்லும் பாதையின் நீளம் அதிகரிக்கப்பட்டது.

மூன்று அமர்வுகளின் முடிவில் 16 பசுக்களில் 11 பசுக்கள் கச்சிதமாக தங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியை நிறைவு செய்தன. அதாவது 15 முதல் 20 முறை சிறுநீர் கழிக்க நேர்ந்த தருணத்திலேயே சுயமாக இந்த வடிவமைக்கப்பட்ட பகுதிக்கு வந்து சிறுநீர் கழிப்பதை பசுக்கள் வழக்கமாக்கிக் கொண்டதாக நியூஸிலாந்து வானொலிவுக்கு அளித்த நேர்காணலில் கூறுகிறார், இந்த ஆய்வில் இடம்பெற்ற லிண்ட்சே மாத்யூஸ்.

“தேர்வு செய்யப்பட்ட பசுக்களில் கிட்டத்தட்ட முக்கால்வாசி பசுக்கள், தங்களுடைய சிறுநீரை கழிக்க வடிவமைக்கப்பட்ட அமைப்புக்கு வந்தன,” என்று அவர் குறிப்பிட்டார்.

இளங்கன்றுகளுடன் ஒப்பிடும்போது சிறுதி வளர்ந்த கன்றுகள் இந்த பயிற்சிக்கு வெகு சீக்கிரத்தில் உடன்பட்டன என்கிறது அந்த ஆய்வு. இத்தகைய வழிமுறைகளின்படி பசுக்களின் சிறுநீர் சேகரிக்கப்பட்டால், 56 சதவீத அளவுக்கு அமோனியா உமிழ்வை குறைக்க முடியலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

விலங்குகளின் வாழ்விடத்தில் அவை சிறுநீர் கழிக்கும் பழக்க வழக்கத்தை உருவாக்கினால், அவை சுகாதாரமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பது மட்டுமின்றி பூமிக்கும் அது பயன்படும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அது சரி…. விலங்குகள் போல அலைந்து, திரிந்து நினைத்த இடத்தில் அவை சிறுநீர் கழிக்கும் பழக்கத்தையும் கட்டுப்படுத்தி அவற்றுக்கென தனி கழிவறைகள் கற்றுக் கொடுக்கும் நிலை வந்தால், விரைவில் விலங்குகள் சிறுநீர் கழிப்பறையை பல இடங்களிலம் நாமும் இனி வரும் காலத்தில் எதிர்பார்க்கலாம் என்றே

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »