Press "Enter" to skip to content

ஜஸ்டின் ட்ரூடோ: பெரும்பான்மை குறைந்தபோதும் பிரதமர் பதவியை தக்க வைத்தது எப்படி?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

கனடாவில் கடந்த இரண்டாண்டுகளில் நடக்கும் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும்.

கடந்த தேர்தலில் பெரும்பான்மை இல்லாததால், ஜஸ்டின் ட்ரூடோவால் முக்கியச் சட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போனது. அதனால் பெரும்பான்மை பெரும் நோக்கத்துடன், நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்னரே தேர்தலை நடத்த உத்தரவிட்டார். ஆனால் இந்த முறையும் அவர் நினைத்தபடி பெரும்பான்மை கிடைக்கவில்லை.

நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 338 இடங்களில் பெரும்பான்மை பெற 170 இடங்கள் தேவைப்படும். 2019இல் நடந்த தேர்தலில் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு 155 இடங்களே கிடைத்தன. இந்த முறை கூடுதலாக இரண்டு இடங்களில் முன்னிலையில் இருப்பதாக ஏபி செய்தி நிறுவனம் கூறியுள்ளது. எனினும் பெரும்பான்மைக்கு இது போதுமானதல்ல.

இது குறித்து மேலும் அறிய இந்த காணொளியைப் பார்க்கவும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »