Press "Enter" to skip to content

உணவும் உடல்நலமும்: சமையல் முறையில் கவனம் தவறினால் புற்றுநோய் ஆபத்து

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உணவு பொருள்களை சில முறைகளில் சமைக்கும்போது நச்சு ரசாயனங்களை உருவாக்கி நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. அவற்றைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

“நாம் பரிணாம வளர்ச்சி பெற்று மனிதர்களாக உருவெடுத்ததற்கான முழுக் காரணமே நாம் உணவைச் சமைக்கத் தொடங்கியதுதான்” என்கிறார் ஜென்னா மேசியோச்சி.

“சமைக்காத உணவை மட்டுமே நாம் உட்கொண்டபோது, தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டியிருந்தது. ஏனென்றால் அதில் இருந்து ஊட்டச் சத்துக்களைப் பெற நமது உடல் போராட வேண்டியிருந்தது.”

சஸ்ஸெக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறை எப்படி நோய் எதிர்ப்பு மண்டலத்துடன் தொடர்பு கொண்டிருக்கிறது என்பது பற்றி ஆய்வு செய்தவர் மேசியோச்சி. அவரது கருத்துடன் உயிரியலாளர்கள் உடன்படுகின்றனர்.

உண்மையில் நெருப்புடன் மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு நேரடியான தொடர்பு இருக்கிறது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »