Press "Enter" to skip to content

பருவநிலை மாற்றம் உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தும்: அமெரிக்க உளவுத்துறை அறிக்கை

பட மூலாதாரம், Getty Images

பருவநிலை மாற்றம் அதிகரிக்கும் சர்வதேச பதற்றத்தை மேலும் உருவாக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் மதிப்பீட்டில் அமெரிக்க உளவுத்துறை அமைப்பு எச்சரித்துள்ளது.

2040ஆம் ஆண்டு வரை தேச பாதுகாப்பில் பருவநிலையின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை பருவநிலை பற்றின அமெரிக்க நாட்டின் உளவுத்துறை மதிப்பீடில் முதன்முறையாக ஆய்வு செய்தது.

இதனை எதிர்கொள்வது எப்படி என்று பல நாடுகள் விவாதிக்கும். அதன் விளைவுகள் பெரும்பாலும் இந்த மாற்றத்தை மிகவும் குறைந்த அளவில் மட்டுமே ஏற்கக்கூடிய ஏழை நாடுகளில் பிரதிபலிக்கும்.

மேலும், எதிர்கால புவி பொறியியல் தொழில்நுட்பத்தை செயல்படுத்த நினைக்கும் சில நாடுகள் தன்னிச்சையாக செயல்படுவதனால் ஏற்படும் ஆபத்தைப் பற்றியும் இந்த அறிக்கை எச்சரிக்கிறது.

மொத்தம் 18 அமெரிக்க உளவுத்துறை முகமைகளின் 27 பக்க மதிப்பீடு ஒரு கூட்டுப்பார்வையாகும். இது தேசியப் பாதுகாப்பில் பருவநிலை எத்தகைய இடம் வகிக்கும் என்பது பற்றி என்பதன் முதல் சிந்தனையாகும்.

இந்த அறிக்கை உலகம் முழுவதும் ஒன்று சேர்ந்து ஒத்துழைக்க தவறியதால், மிகவும் ஆபத்தான போட்டிக்கும் உறுதியின்மைக்கும் தள்ளப்படும் நிலையை இது விவரிக்கிறது. சர்வதேச ஒப்பந்ததை எதிர்பார்த்து அடுத்த மாதம் கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள பருவநிலை உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்துகொள்ளவுள்ள நிலையில் இது வெளியிடப்பட்டது.

தங்கள் பொருளாதாரத்தை ஆதரிக்க முயலும் நோக்கில், நாடுகள் புதிய தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வாய்ப்பை எதிர்நோக்கும் என்று எச்சரித்துள்ளது. 20க்கும் மேற்பட்ட நாடுகள் வாக்கு மொத்த ஏற்றுமதி வருவாயில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக புதைபடிவ எரிபொருள்களை சார்ந்து உள்ள நிலையில், சில நாடுகள் இதைப் பற்றி நடவடிக்கை எடுக்கும் விருப்பத்தையும் தடுக்கும்.

மிக கடுமையான பருவநிலை பாதிப்புக்கு உள்ளாகும் என்று கருதப்படும் மத்திய கிழக்கு நாடுகள் புதைபடிவ எரிபொருள் வருவாயிலும் வீழ்ச்சி அடைந்தால், மேலும் பாதிப்பு அடையும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.

வெகுவிரைவில், பருவநிலை மாற்றத்தின் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்படும் என்று எச்சரிக்கிறது.

மிகவும் ஏழ்மையான நாடுகள்

ஆற்றல், உணவு, நீர் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றில் 11 நாடுகள் மற்றும் இரண்டு பகுதிகள் குறிப்பிட்ட அளவில் ஆபத்தில் உள்ளன என்று அமெரிக்க உளவுத்துறை கண்டுப்பிடித்துள்ளது. அவை மேலும் ஏழ்மையடைந்து, மிகவும் குறைவாகவே ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையில், உறுதியின்மை மற்றும் உட்பூசல் ஏற்படும் ஆபத்தில் இருக்கும். மின்சார விநியோகம் போன்ற சேவைகள் வறட்சி மற்றும் வெப்ப அலை காரணமாக அழுத்ததை சந்திக்கலாம்.

இந்த 11 நாடுகளில் ஐந்து, தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ளன. அவை ஆப்கானிஸ்தான், பர்மா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியாவாகும். நான்கு நாடுகள் மத்திய அமெரிக்கா மற்றும் கரிபீயன் – குவாத்தமாலா, ஹெய்தி, ஹொண்டுராஸ், நிகரகுவா ஆகியவை. மற்றவை கொலம்பியா மற்றும் இராக் ஆகும். மத்திய ஆப்பிரிக்கா மற்றும் பசிஃபிக்கில் உள்ள சிறிய மாநிலங்களும் அபாயத்தில் உள்ளது.

நிலையற்றதன்மை காரணமாக அகதிகள் அதிகம் உருவாகலாம், இது அமெரிக்காவின் தென் எல்லைக்கு அழுத்தம் கொடுக்கும் என்ற எச்சரிக்கையும் கூறப்படுகிறது. இது புதிய மனிதநேயச் சிக்கல்களை உருவாக்கும்.

மோதலுக்கான இடங்கள்

ஆர்டிக் பகுதி இதில் அடங்கும்; அங்கு பனிக்கட்டி குறைந்து வருவதனால், அதனை அணுகத்தக்க நிலை அதிகரிக்கும். இது புதிய கப்பல் போக்குவரத்து பாதைகளுக்கு வழிவகுக்கும். மீன் வளத்திற்கு அணுகக்கூடியதாகும். ஆனால், ராணுவத்தினர் அங்கு செல்லும்போது, தவறான மதிப்பீடு உருவாகும் ஆபத்தும் உள்ளது.

ரஷ்யா

பட மூலாதாரம், Getty Images

நீருக்கான அணுகுதலும் சிக்கல்களுக்கான அடிப்படையாக உருவாகும். மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில், கிட்டதட்ட 60 சதவீதம் மேற்பரப்பு நீரின் வளங்கள் எல்லைகளைத் தாண்டி செல்கின்றது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நீண்ட காலமாக நீர் பிரச்சனை உள்ளது. இந்நிலையில், சீனா, கம்போடியா மற்றும் வியட்நாமிக்கு இடையே மேகோங் ஆறு பேசின் காரணமாக பிரச்சனை ஏற்படலாம் என்று அறிக்கை எச்சரிக்கிறது.

எதிர்கால தொழில்நுட்பம்

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஒரு நாடு புவி பொறியியலை பயன்படுத்த முடிவு செய்யலாம் என்று மற்றொரு வகையான ஆபத்தும் உள்ளது.

இது எதிர்கால தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதும் அடங்கும். உதாரணமாக, மேல் வளி மண்டலத்தில் பிரதிபலிக்கும் துகள்களை அனுப்பதல். இது எரிமலை வெடிப்பின் குளிர்ச்சியடையும் விளைவுகளை நகலாகும். அல்லது குறிப்பிட்ட பகுதியில் குளிர்ந்த பெருங்கடலில் ஏரோசோலை பயன்படுத்தவதற்கு சமம்.

ஆனால், ஒரு நாடு மட்டுமே நடவடிக்கை எடுத்தால், அப்பிரச்சினையை மற்றொரு பகுதிக்கு அது நகர்த்தும். இது பிற நாடுகளில் எதிர்மறையான வகையில் கோபத்தை உருவாக்கும் அல்லது அந்நாட்டிற்கு நடவடிக்கை எடுக்கமுடியாமல் போகும்.

ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய பல்வேறு நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்களும், பல்வேறு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களும் இந்த தொழில்முறைகளை ஆராய்ந்து வருகின்றனர். ஆனால், மிகவும் குறைவான விதிமுறைகளும் வரையறைகளுமே உள்ளன.

ஒத்துழைப்புக்கான விளிம்புநிலை

இந்த இருண்ட எதிர்காலத்தை தவிர்க்க சில வழிகள் உள்ளன என்று இந்த அறிக்கை கூறுகிறது. புவி பொறியியலின் அனுமதிக்கக்கூடிய பயன்பாடு உட்பட தடையை தகர்க்கும் தொழில்நுட்பங்கள் இதில் சில. மற்றொன்று, பெரும் ஒத்துழைப்பை வலியுறுத்தக்கூடிய பருவநிலை பேரழிவு.

பாதுகாப்பு பற்றின சிந்தனையின் முக்கிய பகுதியாக தற்போது பருவநிலை இருக்கிறது என்பதன் குறியீடுதான் இந்த அறிக்கை. இது ஏற்கனவே இருக்கும் சிக்கல்களை அதிகரிக்கும்; புதிய சிக்கல்களையும் உருவாக்கும்.

“எப்போதும் இல்லாத வகையில், தேசியப் பாதுகாப்பு நிலவரத்தை பருவநிலை மாற்றம் உருவாக்குகிறது என்று அரசுகள் மிகுதியாக ஆங்கீகரிக்கின்றன.”, என்று தேசிய உளவுத்துறை பேரவையின் முன்னாள் ஊழியரும், பருவநிலை மற்றும் பாதுகாப்புக்கான மையத்தின் இயக்குநருமான ஐரின் சிகோர்ஸ்கே பிபிசியிடம் கூறுகிறார்.

“சீனாவுடனான போட்டி போன்ற மற்ற பாதுகாப்பு விஷயங்களில் இருந்து பருவநிலை முக்கியத்துவத்தை பிரிக்க முடியாது. கடற்கரையோர நகரங்களில் வாழும் லட்சக்கணக்கான மக்களை பாதிக்கும் அதிகரித்து வரும் கடல் மட்டளவு முதல் ஆற்றல் துறை கட்டமைப்பை அச்சுறுத்தும் உட்பகுதிகளின் வெள்ளம் வரையிலும், உணவு பாதுகாப்பை வீழ்த்தும் புலம்பெயரும் மீன் வளமும், பாலைவானமாக்கப்படுதலும் என அந்த நாடு கூட்டு பருவநிலை ஆபாயத்தை எதிர்கொள்கிறது. இந்த காரணிகளை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாத தேசிய பாதுகாப்பு திறனாய்வு, சீனாவின் நடத்தை குறித்த முக்கிய கேள்விகளுக்கான பதில் தவறாகவே கிடைக்கும்.”

இந்த புதிய உளவுத்துறை மதிப்பீடு நம் முன்னால் இருக்கும் முக்கிய சிக்கல்களை எடுத்துரைத்துள்ளது. ஆனால், இந்த உளவுத்துறைகளிடம் இருந்து வரும் எச்சரிக்கை குறித்து அரசாளுபவர்கள் என்ன செய்வார்கள் என்பதே உண்மையான கேள்வியாக இருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »