Press "Enter" to skip to content

2030இல் காடுகள் அழிப்பை நிறுத்த உறுதியேற்ற முக்கிய நாடுகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

2030இல் காடுகள் அழிப்பை நிறுத்த உறுதியேற்ற முக்கிய நாடுகள்

அமேசானில் சுரங்கத் தொழிலை ஊக்குவிப்பது, காடுகளை அழித்து அங்கே விவசாயம் செய்ய ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அந்நாட்டின் அதிபர் சயீர் போல்சனாரோ விமர்சனத்துக்கு உள்ளாகிறார்.

சுற்றுச்சூழல் சட்டங்களை மீறும் மரம் வெட்டிகள் மற்றும் விவசாயிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் அரசு முகமைகளுக்கான நிதியை போல்சனாரோ குறைக்கிறார். சட்ட விரோதமாக மரம் வெட்டுவோரிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராதம் 2020ம் ஆண்டில் 20 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.

மிகத்துல்லியமான புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை. ஆனால், சமீபத்திய ஆய்வுகளின்படி பிரேசிலில் நடந்த காடழிப்பு மற்றும், வாழிட அழிப்பு ஆகியவற்றில் 94 சதவீதம் சட்டவிரோதமாக செய்யப்பட்டவை.

ஆனால், அமேசான் காடுகள் அழிக்கப்படுவது பிரேசிலில் மட்டும் நடப்பதில்லை. அதன் அண்டை நாடான பொலிவியாவிலும் இது நடக்கிறது.

கடந்த ஆண்டு பொலிவியாவில் கிட்டத்தட்ட 3 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான வெப்பமண்டலக் காடுகள் அழிவை சந்தித்தன – உலகில் நடந்த நான்காவது பெரிய காடழிப்பு இது.

இது குறித்து விரிவாக அறிய இந்த காணொளியை பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »