Press "Enter" to skip to content

அமேசான் மக்களின் அவலத்தை வெளிப்படுத்திய மிகுதியாக பகிரப்பட்ட புகைப்படம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமேசான் மக்களின் அவலத்தை வெளிப்படுத்திய மிகுதியாக பகிரப்பட்ட புகைப்படம்

பிரேசிலின் அமேசான் காடுகளில், கொரோனா தடுப்பூசிக்காக தன் தந்தையை முதுகில் சுமந்த படி ஓர் இளைஞர் நடக்கும் புகைப்படம் இணையத்தில் மிகுதியாக பகிரப்பட்டுியுள்ளது.

கொரோனா தடுப்பூசியை அணுகுவதில் உள்ள பிரச்னைகளை உலகத்துக்கு வெளிப்படுத்தும் ஒரு குறியீடாக மாறியுள்ளது அப்படம்.

இருவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு, மருத்துவர் எடுத்த படம், 24 வயதான தாவி, 67 வயதான தன் தந்தை வாஹூவை சுமந்திருப்பது போல் உள்ளது. தடுப்பூசி செலுத்தும் இடத்தை அடைய, அவர்கள் காட்டுக்குள் பல மணி நேரம் நடக்க வேண்டும்.

பிரேசில் நாட்டில் 853 பழங்குடி மக்கள் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பால் இறந்துவிட்டதாக அந்நாட்டின் அதிகாரபூர்வ தரவுகள் கூறுகின்றன. என்ன நடந்தது என்பதை இந்தக் காணொளியில் பார்ப்போம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »