Press "Enter" to skip to content

அறிவியல் அதிசயம்: கல்லீரல் கொடுத்து சிறுநீரகம் பெற்ற 19 வயது சிறுமி

  • இயான் ரோஸ்
  • பிபிசி வணிகம்

பட மூலாதாரம், Aliana Deveza

வெறும் 19 வயதான அலியானா டெவெசா தன் தாயின் உயிரைக் காப்பாற்ற, மருத்துவ வரலாற்றில் மிக முக்கியமான அறுவை சிகிச்சைக்கு தானே ஏற்பாடு செய்து, அதை எதிர்கொண்டுள்ளார்.

அலியானா ஒரு மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு, அமெரிக்காவின் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு உடல் உறுப்புக்கு பதில், மற்றொரு உடல் உறுப்பை மாற்றிக் கொள்ளும் அறுவை சிகிச்சையை மேற்கொள்வது தொடர்பாக விசாரித்துள்ளார்.

“நான் கண் விழித்த போது, என் தாய் எப்படி இருக்கிறார்? அவர் நன்றாக இருக்கிறாரா? அவருக்கான அறுவை சிகிச்சை வெற்றி பெற்றதா? என்று நான் கேட்டேன்.

“நான் என்னைக் குறித்து அதிகம் கவலைப்படவில்லை, நான் அனுபவிக்கும் வலியிலிருந்து விடுபட வேண்டு என்கிற ஒற்றை நோக்கத்தில் இருந்தேன். எல்லோருக்கும் அறுவை சிகிச்சை வெற்றி பெற்றது என்பதைக் கேட்ட பிறகுதான் என்னால் மீண்டும் சுவாசிக்க முடிந்தது”

மற்றவர்கள் என்று அலியானா குறிப்பிடுவது தன்னையும், தன் தாயை மட்டுமல்ல, காரணம் இந்த அறுவை சிகிச்சைப் பட்டியலில் இரு சகோதரிகளும் இடம் இருந்தார்கள்.

அலியானாவின் உடல் உறுப்பு ஒரு சகோதரிக்கும், மற்றொரு சகோதரியின் சிறுநீரகம் அலியானாவின் தாய்க்கும் மாற்றி வைக்கும் அறுவை சிகிச்சை நடந்தது.

இரு நபர்கள் தங்களுக்கு முன்பின் அறிமுகமில்லாத நபர்களுக்கு உறுப்பு தானம் செய்து, தங்கள் குடும்பத்தினரை காப்பாற்றுவதன் மூலம், இரு உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

இந்த அறுவை சிகிச்சை இரண்டு ஆண்டுகளின் தொடர் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. அலியானா தன் தாய் எரொசலினை சிறுநீரக டயாலிசிஸ் மற்றும் முன்கூட்டியே இறப்பதிலிருந்து காப்பாற்றினார். மேலும் அறிமுகமில்லாத ஒரு நபரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

சிறுநீரகத்தை மட்டுமே உயிரோடு வாழும் நபர், மற்றவர்களுக்கு நன்கொடையாக வழங்க முடியும். நம்மில் பலரும் இரு சிறுநீரகத்தோடு பிறந்தாலும், ஒரு சிறுநீரகத்தைக் கொண்டு வாழ்ந்துவிட முடியும்.

இருப்பினும், ஒருவருக்கு சிறுநீரகம் தேவை என்றால், அவருடைய அன்பிற்குரியவரிடமிருந்து, அவர்கள் தர விருப்பப்பட்டாலும் கூட எடுத்துக் கொள்ள முடியாது.

2019ஆம் ஆண்டு உலகம் முழுக்க 1,50,000 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. அதில் ஒரு சிறு எண்ணிக்கையிலான மக்களுக்கு மட்டுமே புதிய உறுப்பு தேவைப்பட்டது.

ஆல்வின் ராத்

பட மூலாதாரம், Nobel Media

ஆல்வின் ராத் என்கிற பொருளாதார வல்லுநர், நிறைய மக்கள் சிறுநீரகத்தை கொடுக்கவும் பெற்றுக் கொள்ளவும் ஓர் அமைப்பை உருவாக்கியதற்காக 2012ஆம் ஆண்டு, நோபல் பரிசைப் பெற்றார்.

“மற்ற உடல் உறுப்புகளைப் போல் இல்லாமல், யாரோ ஒரு நபர், தான் விரும்பும் வேறு யாரோ ஒருவருக்கு சிறுநீரகத்தைக் கொடுத்து, அவர்கள் உயிரைப் காக்க முடியும்” என விவரிக்கிறார்.

“ஆனால் சில நேரங்களில், நீங்கள் சிறுநீரகத்தைக் கொடுக்க தயாராக, நல்ல உடல் நலத்தோடு இருந்தாலும், அதை எடுத்துக் கொள்ள முடியாது. அதே போல அன்பிற்குரிய ஒருவருக்கு சிறுநீரகத்தைக் கொடுக்க விரும்பினாலும் கொடுக்க முடியாது.

ஆனால், என் சிறுநீரகம், உங்கள் நோயாளிக்கும், உங்கள் சிறுநீரகம் என் நோயாளிக்கும் ஒத்து வரலாம். அப்படி சிறுநீரகத்தைக் கொடுக்க விரும்புபவர்கள் ஒன்றிணைந்து, தங்களுக்கு ஒத்துப் போகும் சிறுநீரகத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.”

ஆல்வின் ராத் மற்றும் அவரோடு பணியாற்றியவரின் இந்த அமைப்பு, சிறுநீரகத்தை ஒருவருக்கு ஒருவர் மாற்றிக் கொள்ளும் எண்ணிக்கையை கணிசமாக அதிகரித்தது. அதனால் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக் கணக்கானோரின் உயிர் காக்கப்படுகிறது.

அறுவை சிகிச்சை அறை

பட மூலாதாரம், Getty Images

இந்த மாதிரியான உறுப்பு பரிமாற்றங்கள் எல்லா நாடுகளிலும் இன்னும் சட்டப்படி அனுமதிக்கப்படவில்லை. உதாரணமாக ஜெர்மனியைக் கூறலாம், அங்கு உடல் உறுப்பை நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே தானமாகக் கொடுக்க முடியும்.

ஆனால் அலியானாவால் தன் சிறுநீரகத்தை தன் தாய்க்கு கொடுக்க முடியவில்லை. காரணம், அவர் தாய்க்கு இருக்கும் சிறுநீரகப் பிரச்சனை பரம்பரையாக வழி வழியாக வருவதாக இருக்கலாம் என மருத்துவர்கள் அஞ்சினர். எனவே அலியானாவுக்கும் சிறுநீரகப் பிரச்சனை இருக்கலாம் என்று கருதினர்.

இத்தனைக்குப் பிறகும், அலியானா தன் தாய்க்கு புதிய சிறுநீரகத்தைப் பெற உதவ வேண்டும் என்று கருதினார். எனவே தொடர்ந்து ஆராய்ந்த போது, கல்லீரலின் ஒரு பகுதியைக் கொடுத்து, சிறுநீரகத்தைப் பெறுவது சாத்தியப்படலாம் என்று கண்டுபிடித்தார்.

“உயிரோடு ஒருவர் இருக்கும் போது என்ன மாதிரியான உடல் பாகங்களை எல்லாம் தானமாகக் கொடுக்க முடியும் என்று ஆராயத் தொடங்கிய போது, கல்லீரல் கொடுக்கலாம் என்று விடை கிடைத்தது” என்கிறார் அலியானா.

அது ஏட்டளவில் இருக்கும் ஒரு கருத்தியல் சாத்தியக்கூறு என்பதை அலியானா அறிந்திருக்கவில்லை. மேலும் இது ஒரு சாதாரண வழக்கமான அறுவை சிகிச்சை அல்ல என்பதையும் அவர் அறிந்திருக்கவில்லை.

அலியானா டெவெசா மற்றும் அவர் தாய் எரொசலின்

பட மூலாதாரம், Getty Images

தான் கண்டுபிடித்த சாத்தியக் கூறை செயல்படுத்த, அலியானா மருத்துவமனைகளை அழைத்து பேசத் தொடங்கினார். தன்னுடைய ஒரு பகுதி கல்லீரலுக்கு பதிலாக, தன் தாய்க்கு ஒரு சிறுநீரகத்தைக் பெற்று பரிமாற்றம் செய்து கொள்ள முடியுமா என்று தேடத் தொடங்கினார்.

தான் கூறுவதை சில மருத்துவமனைகளால் புரிந்து கொள்ள முடியவில்லை என அலியானா கூறுகிறார். “நான் கூறுவதைப் புரிந்து கொள்ள முடியாமல் சில மருத்துவமனைகள், என் தொலைபேசி அழைப்பை பிணவறையோடு இணைத்தனர்”

கடைசியாக, அலியானா எதிர்பார்த்த பணிக்குச் சரியான மருத்துவர் ஒருவர் கிடைத்தார். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜான் ராபர்ட்ஸ் என்கிற அறுவை சிகிச்சை நிபுணர் அவர்.

19 வயது இளம் பெண் ஒருவர் கூறுகிறார் என அவர் என் யோசனையைப் புறந்தள்ளவில்லை. இந்த யோசனைக்கு என் குடும்பம் எதிராக இருந்தது. காரணம், அவர்கள் என்னை நானே அபாயத்தில் சிக்க வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்கிறார் அலியானா.

மருத்துவமனையின் உதவியோடு, அலியானா மற்றும் அவரது தாயோடு ஒத்துப் போகும் சகோதரிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். அதில் ஒரு சகோதரி, அலியானாவிடமிருந்து ஒரு பகுதி கல்லீரலையும், மற்றொரு சகோதரியிடமிருந்து ஒரு புதிய சிறுநீரகத்தையும் பெறுவர் என ஏற்பாடு செய்யப்பட்டது.

அலியானாவுக்கு இந்த அறுவை சிகிச்சையில் எந்த வருத்தமும் இல்லை. “மக்கள் உறுப்பு தானம் செய்யாததற்கு, உறுப்பு தானத்தைச் சுற்றியுள்ள பயம் காரணமாக மேற்கொள்வதில்லை என்று நான் கருதுகிறேன் ” என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »