Press "Enter" to skip to content

நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஓ.டி.டி-யில் Binge watching: இதற்கு பின்னால் உள்ள உளவியல் என்ன?

பட மூலாதாரம், Getty Images

ஓடிடியில் உங்களின் விருப்பமான ஒரு தொடரை பல மணிநேரம் தொடர்ந்து பார்க்கும் பழக்கம் கொண்டவர்களா நீங்கள்? அதாவது Binge watching செய்யக்கூடியவர்களா நீங்கள்?

இந்த பிஞ்ச் வாட்சிங் போக்கிற்கு பின்னால் உள்ள உளவியல் குறித்து என்றாவது யோசித்ததுண்டா நீங்கள்?

சரி வாருங்கள் பின்ஜ் வாட்சிங் செய்யலாம்… இல்லை! ஐந்து நிமிடங்களில் எளிதாக அதற்கு பின்னால் இருக்கும் உளவியலைப் புரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

நீங்கள் உங்கள் தூக்கத்தை தொலைத்து மணி கணக்காக உங்கள் அலைபேசியை உற்றுநோக்கி தொடர்களை பார்த்து கொண்டு பொழுதை போக்குவதைத்தான் ஓடிடி நிறுவனங்களும் விரும்புகின்றன.

ஏனென்றால் அவர்கள் அதைநோக்கிதான் பணி செய்கிறார்கள். அவர்கள் இதற்காக சிறுசிறு உத்திகளை பயன்படுத்துகிறார்கள்.

உதாரணமாக நெட்ஃபிளிக்ஸ் அல்லது அமேசானை எடுத்துக் கொண்டால் ஒரு காணொளிவுக்கான விளக்கப் படம் (thumbnail), ஒரு எபிசோட் முடியும் தருவாயில் அடுத்த எபிசோடுக்கு முன்னோட்டத்தை ஓடவிடுவது, உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அடுத்தடுத்த தொடர்களை காண்பிப்பது போன்றவற்றை அவர்கள் செய்கிறார்கள்.

ஒரு வாடிக்கையாளரை அந்த காணொளிவின் மூலம் எவ்வாறு உள்ளிழுக்கலாம், அதற்கு எந்த படங்களை வைக்கலாம் என ஆராய்கிறார்கள்.

அதேபோல நீங்கள் வாட்சப்பில் வந்த செய்திகளையோ வேறு எதையோ பார்க்க வெளியேற முயற்சித்தால் ஓடிடி தளம் உங்கள் அலைபேசியில் சின்ன (மினி)மைஸ் செய்யப்பட்டு ஓடிக் கொண்டிருக்கும்.

இப்படி சிறிய உத்திகளாலும் தரவுகளாலும் நாம் அந்த தளத்தில் பல மணி நேரங்கள் இருப்பது போன்ற சூழல் ஏற்படுகிறது.

பின்னால் இருக்கும் உளவியல்

சில நேரம் இப்படி நேரத்தை கழிப்பதை கண்டு பலர் வருத்தமடைவர். ஆனால் அதே சமயம் தமது நண்பர்கள் வட்டாரத்தில் தாம் தனித்துவிடப்படக்கூடாது, ஒரு விவாதத்தில் நாமும் கலந்து கொள்ள வேண்டும் என்று இம்மாதிரியாக தொடர்ந்து பல மணி நேரங்களுக்கு தொடர்களை பார்க்கிறோம்.

ஒரு தொடர் பிரபலம் அடைகிறது, பலர் அதைப் பற்றி பேசிகிறார்கள், எழுதுகிறார்கள் என்றால் நீங்களும் அந்தக் கூட்டத்தில் சேர அந்தத் தொடரை தேடிப் போவீர்கள்.

பெண்

பட மூலாதாரம், Getty Images

கதாப்பாத்திரத்தோடு ஒன்றுதல்

“நாம் தொடரை தொடர்ந்து பார்க்கும்போது ஒரு கதாபாத்திரத்தோடு நாம் நம்மை தொடர்புப்படுத்தி கொண்டால் நமது உடலில் இருந்து ‘லவ் ஹார்மோன்’ என்று அழைக்கப்படக்கூடிய ஆக்ஸிடோசின் ஹார்மோன் வெளியேறுகிறது. இது உடனடியாக அந்த கதாபாத்திரத்துடன் நமக்கு ஓர் இணைப்பை உருவாக்குகிறது,” என்கிறார் உளவியல் நிபுணர் ஹமிரா.

இந்த பின்ஜ் வாட்சிங்கால் நமக்கு ஏதேனும் பலன் உண்டா?

“ஒரு தொடரை தொடர்ந்து நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்களின் மூளைக்குள் நீங்கள் உங்கள் உணர்வுகள் குறித்தும் பிறரோடு உங்களுக்கு இருக்கும் உறவுகள் குறித்தும் யோசிக்க தொடங்குவீர்கள்,” என்கிறார் ஹமீரா.

நமது மூளை சில சமயங்களில் கற்பனை சம்பவங்களால் தூண்டப்பட்டுள்ளதா அல்லது நிஜமான நிகழ்வுகளால் தூண்டப்பட்டுள்ளதா என்ற வித்தியாசத்தை வேறுபடுத்தி பார்ப்பதில்லை.

இந்த பின்ஜ் வாட்சிங் என்பது நாம் ஏதோ பொழுதுபோக்கிற்காக பார்க்கிறோம் என்றில்லை.

மொபைல்

பட மூலாதாரம், Getty Images

“இப்படி அளவுக்கு மீறி நிகழ்ச்சிகளை பார்ப்பது நமது நரம்பு மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்,” என்கிறார் ஹமீரா.

பின்ஜ் வாச்சிங் என்றால் நீங்கள் உங்கள் புலன்களை வெகு நேரம் விழிப்பு நிலையில் வைத்துள்ளீர்கள் என்று அர்த்தம். எனவே இது தணிய உங்களுக்கு அதிக நேரம் பிடிக்கலாம்.

“எடுத்துக்காட்டாக உங்களுக்கு பிடித்தமான ஒரு கதாபாத்திரம் கொல்லப்பட்டாலோ உயிரிழந்துவிட்டாலோ உங்கள் நரம்பியல் அமைப்பு தூண்டப்படுகிறது. அது உங்களின் தூக்கத்தை கெடுத்துவிடும்,” என்கிறார் ஹமீரா.

‘காணொளி ஆன் கோரிக்கை’ என்று சொல்வார்கள் அதாவது வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய தொடர்களையோ அல்லது படங்களையோ எந்த நேரத்திலும் பார்த்துக் கொள்ளும் சேவை. இந்த சேவைகளில் கதைகள் புதிய பரிமாணங்களில் சொல்லப்படுகின்றன.

பின்ஜ் வாட்சிங் போக்கை மனதில் கொண்டே இம்மாதிரியான தொடர்கள் வடிவமைக்கப்படுகின்றன.

“இந்த பின்ஜ் வாட்சிங் என்பது தீய பழக்கத்துடன் தொடர்பு படுத்தி பேசப்படுகிறது. நாம் தொலைக்காட்சி தொடரையோ ஓடிடி தொடரையோ தொடர்ந்து பார்ப்பதை பின்ஜ் வாட்சிங் என்று சொல்கிறோம். ஆனால் பின்ஜ் வாட்சிங் கெடுதி என்று கூறவேண்டும் என்றால் அதற்கான கடைசி ஆளாகதான் இருப்பேன்” என்கிறார் பின்ஜ் என்ற ‘இன்டராக்டிவ்’ நிகழ்ச்சியை உருவாக்கிய பிரைன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »