Press "Enter" to skip to content

பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை அதிகரிக்கக்கூடும்: அமெரிக்க உயரதிகாரி

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் அணு ஆயுதங்களையும், ராணுவ பலத்தையும் பார்க்கும் போது, பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை அதிகரிக்கக்கூடும் என்று அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகனின் உயர் புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை நவீனத்துவப்படுத்திலும், விரிவுபடுத்தவதிலும் தொடர்ந்து செயல்படும் என்று அதிகாரி தெரிவிக்கிறார்.

இதனை ஆயுதப் படை தொடர்பான செனட் குழுவுடன் நடத்திய சந்திப்பில் அமெரிக்காவின் பாதுகாப்பு உளவுத்துறை பிரிவின் இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ஸ்காட் பேரியர் தெரிவித்தார்.

அவர், “இந்தியாவில் உள்ள அணு ஆயுதங்களையும், ராணுவத்தின் பலத்தையும் பார்க்கும்போது, பாகிஸ்தான் தங்கள் நாட்டுக்கு அணு ஆயுதங்களை மிக முக்கியமாக கருதுகிறது.

2022 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தனது ஆயுதங்களை கொண்டு ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதுடன், அணு ஆயுதங்களை நவீனமாயமாக்கவும் , விரிவுபடுத்தவும் செய்யும்”, என்றார்.

அவர் புல்வாமா சம்பவம் குறித்து பேசுகையில், “கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காஷ்மீரில் சி.ஆர்.பி.எஃப். வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, 40 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிறகு, இந்தியாவுடனான பாகிஸ்தானின் உறவு மோசமாக உள்ளது”, என்றார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சமீபகாலமாக நடந்த நிரந்தர தீர்வுக்கான பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று பேரியர் கூறுகிறார்.

2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 370 சட்டப்பிரிவின்படி, ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமையை இந்தியா ரத்து செய்தது. அதை ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றியது. இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் இந்தியாவுடனான ராஜீய உறவை குறைத்துக்கொண்டது. மேலும் இஸ்லாபாத்தில் உள்ள இந்திய உயர் ஆணையரை வெளியேற்றியது.

இந்தியாவின் நிலை என்ன?

பாகிஸ்தான், சீனாவிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள இந்தியா ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்க விரும்புவதாக ஜெனரல் ஸ்காட் பேரியர் கூறுகிறார்.

அணு ஆயுதம் - பாகிஸ்தான், இந்தியா

பட மூலாதாரம், Getty Images

ஜெனரல் பேரியர் மேலும் கூறுகையில், “டிசம்பரில் எஸ் 400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் ஆரம்ப கட்ட வாங்குதல்களைப் பெற்றது. சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடமிருந்து இந்தியா தன்னை பாதுகாத்துக்கொள்ள, இந்த அமைப்பை இந்த ஆண்டு ஜூன் மாதம் செயல்படுத்த முடியும் என்றார்.

“இந்தியா மிகப்படுத்துதல்பர்சோனிக், பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணை திட்டங்களை உருவாக்கி வருவதாகவும், 2021 ஆம் ஆண்டில், இது தொடர்பாக பல சோதனைகளை நடத்தியதாகவும் அவர் கூறினார்.

இது தவிர, விண்வெளித்துறையில் தனது திறன்களை மேம்படுத்தும் வகையில் இந்தியாவிடம் பல செயற்கைக்கோள்கள் உள்ளன.

வான், நிலம், கடற்படை மற்றும் தந்திரோபாய அணுசக்திப் படைகளின் விரிவான நவீனமயமாக்கலில் இந்தியா வேகமாகச் செயல்பட்டு வருவதாக பேரியர் கூறினார்.

இதனுடன், உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்திக்கும் அவர் முக்கியத்துவம் அளித்து வருகிறார். இந்தியா ஒரு ஒருங்கிணைந்த போர்க்கள கட்டளை அமைப்பை உருவாக்கப் போகிறது, அதன் உதவியுடன் அதன் முப்படைகளின் கூட்டு செயல்பாட்டை மேலும் மேம்படுத்த முடியும்.

அணு ஆயுதம் - பாகிஸ்தான், இந்தியா

பட மூலாதாரம், Getty Images

2019 ஆம் ஆண்டு முதல், பிரதமர் நரேந்திர மோதி தனது உள்நாட்டு பாதுகாப்புத் துறையை விரிவுபடுத்துவதன் மூலம், வெளிநாட்டில் இருந்து பாதுகாப்புத்துறைக்கான ஆயுதங்களை வாங்குவதைக் குறைத்துக்கொண்டார். ஆனாலும், இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவு இன்னும் வலுவான நிலையில் இருப்பதாக பேரியர் கூறினார்.

ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே நடந்து வரும் போரில் எந்த சார்பும் எடுக்காத அதே வேளையில், இந்தியா எங்கும் ரஷ்யாவை விமர்சிக்கவில்லை. ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தது இந்தியாவின் கவலையை அதிகரித்துள்ளது என்றும் பேரியர் கூறினார்.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தீவிரவாத அமைப்புகளான லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்றவற்றின் செயல்பாடுகள் தங்கள் நாட்டில் அதிகரிக்கக்கூடும் என்று இந்தியா அஞ்சுகிறது. இதனிடையே, ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் புதன்கிழமையன்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரியை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சந்தித்துப் பேசினார்.

பிராந்திய பாதுகாப்புடன் இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை நடந்தது. . ஆன்டனி பிளிங்கனின் அழைப்பின் பேரில் புதன்கிழமை ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த “உலகளாவிய உணவு பாதுகாப்பு நடவடிக்கைக்கான அழைப்பு” கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சராக பிலாவல் பூட்டோ தனது முதல் அமெரிக்க பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

எந்த நாடு அதிகம் அணு ஆயுதங்களை வைத்துள்ளது?

ஸ்வீடனைச் சேர்ந்த ‘ ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதிக்கான ஆராய்ச்சி நிறுவனம்’ தனது 2021 ஆண்டுக்கான அறிக்கையில்

பனிப்போர் காலம் (1990ஆம் ஆண்டு) முடிவுக்கு வந்ததில் இருந்து உலகில் அணு ஆயுதக் குறைப்பு, நிறுத்தப்பட்டிருப்பதுது இதுவே முதல்முறை என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவை விட பாகிஸ்தானும், சீனாவும் அணு ஆயுதங்களை உருவாக்குவதில் முன்னோக்கி உள்ளதாகவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா கடந்த ஆண்டு ஆறு அணு அயுதங்களை உருவாக்கியுள்ளது. தற்போது 156 அணு ஆயுதங்கள் இந்தியாவிடம் உள்ளன.

பாகிஸ்தான் கடந்த ஆண்டு ஐந்து அணு ஆயுதங்களை உருவாக்கியுள்ளது. அந்நாட்டில் தற்போது 165 அணு ஆயுதங்கள் உள்ளன.

சீனா கடந்த ஆண்டு 30 அணு ஆயுதங்களை உருவாக்கியுள்ளது. தற்போது அதனிடம் 350 அணு ஆயுதங்களை உள்ளன.

இஸ்ரேலிடம் 90 அணு ஆயுதங்கள் உள்ளன.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், வட கொரியா 10 புதிய அணு ஆயுதங்கள் உருவாக்கியுள்ளது. வட கொரியாவிடம் 40-50 அணு ஆயுதங்கள் உள்ளன

அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு (Federation of American scientists) என்ற அமைப்பின் கருத்துப்படி, ரஷ்யாவிடம் 5,977 அணு ஆயுதங்கள் உள்ளன. அவற்றில் 1,500 ஆயுதங்கள் காலாவதியாக உள்ளன. அவை விரைவில் அழிக்கப்படும்.

சீனா, பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 191 நாடுகள், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், அவர்கள் அணு ஆயுதக் குவிப்பைக் குறைக்க வேண்டும். மேலும், கொள்கையளவில் அதை முற்றிலும் அகற்ற வேண்டும்.

1970, 1980களில், இந்த நாடுகள் தங்கள் ஆயுத எண்ணிக்கையை குறிப்பிடத்தக்க அளவில் குறைத்தன.

இந்தியா, இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தான் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. 2003ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து வடகொரியா விலகியது.

உலகின் ஒன்பது அணுசக்தி வல்லரசுகளில் இஸ்ரேல் மட்டும்தான் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக ரஷ்யாவிடம் முறைப்படி கூறவில்லை.

ஆனால் இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

உலகின் ஆயுதங்கள் இறக்குமதி எப்படி உள்ளது?

‘ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதிக்கான ஆராய்ச்சி நிறுவனம்’ அளித்த அறிக்கையின்படி, 2010, 2014 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் உலக ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 15% ஆக இருந்தது.

இதனுடன், ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடத்தில் இருந்தது.

மற்றொரு புறம், பிரிட்டன்,பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி, ஆயுத ஏற்றுமதியில் மூன்றாவது மிகப்பெரிய நாடாக சீனா உருவெடுத்துள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு, இந்தியா தனக்குத் தேவையான ஆயுதங்களை தானே 70% சதவீதம் உருவாக்குவது என்று தீர்மானித்தது. அதில், தற்போதும் வரை 35-40 சதவீத அளவை மட்டுமே இந்தியா எட்டியுள்ளது.

அணு ஆயுதம் - பாகிஸ்தான், இந்தியா

பட மூலாதாரம், Getty Images

‘ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதிக்கான ஆராய்ச்சி நிறுவன’ அறிக்கைப்படி, உலகளவில் ஒவ்வோர் ஆண்டும், ராணுவத்திற்கு செலவிடும் தொகை 1.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த அறிக்கையின்படி, ராணுவத்திற்கு அதிகம் செலவிடும் முதல் நாடாக அமெரிக்கா உள்ளது. ராணுவத்துக்கு செலவிடும் தொகையில் அமெரிக்காவின் பங்கு 43 சதவீதம் ஆகும்.

இரண்டாவது நாடாக சீனாவும், அதற்கு அடுத்தடுத்த நாடுகளாக பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா உள்ளன.

அணு ஆயுதங்கள் மூலம் எவ்வளவு அழிவு ஏற்படுகிறது?

அணு ஆயுதங்களின் முக்கிய நோக்கமே பேரழிவை ஏற்படுத்துவதுதான். ஆனால், அந்த அழிவின் அளவு பின்வரும் விஷயங்களை பொருத்தது.

  • அணு ஆயுதத்தின் அளவு
  • தரை மட்டத்தில் இருந்து எவ்வளவு உயரமாக அது வெடிக்கிறது.
  • உள்ளூர் சுற்றுச்சூழல்
அணு ஆயுதம் - பாகிஸ்தான், இந்தியா

பட மூலாதாரம், Getty Images

ஆனால், சிறிய ரக அணு ஆயுதம் பெருமளவிலான மக்களை அழிக்க முடியும். மேலும் பல தலைமுறைகளை இது பாதிக்கக்கூடும்.

இரண்டாவது உலக போரின் போது, அமெரிக்கா ஜப்பான் மீது தாக்குதல் நடத்திய அணு ஆயுதத்தின் எடை 15 கிலோடன்.

இன்று அணு ஆயுதங்கள் ஆயிரம் கிலோடன் எடை வரை உள்ளன.

ஒரு பெரிய அணு ஆயுதம் வெடித்தால், எதுவும் எஞ்சி இருக்காது என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »