Press "Enter" to skip to content

சீனாவில் குறைந்து வரும் மக்கள்தொகையால் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

  • ஷியாஷிங் பென்
  • பிபிசி ஃயூச்சர்

பட மூலாதாரம், Getty Images

கடந்த 40 ஆண்டுகளாக 660 மில்லியனிலிருந்து 1.4 பில்லியன் வரை மக்கள்தொகை கண்ட சீனாவில், 1959 – 1961 பெருமளவில் ஏற்பட்ட பஞ்சத்திற்கு பிறகு தற்போது மக்கள்தொகை குறைந்து வருகிறது.

சீனாவின் தேசிய புள்ளிவிவர பணியகத்தின் தகவல்படி, சீனாவின் மக்கள்தொகை 2021ஆம் ஆண்டில் வெறும் 1.41212லிருந்து 1.41260 வரையே வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிகிறது. இது மிக மிக குறைந்த அளவிலான ஒரு வளர்ச்சி.

கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த கோவிட் சமயத்தில் குழந்தைகள் பெற்றுக்கொள்ள பெண்கள் அதிகம் விருப்பம் காட்டவில்லை என்பது இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.

1980களின் பிற்பகுதியில் சீனாவின் மொத்த கருவுறுதல் விகிதம் 2.6ஆக இருந்தது. அதன்பின் 1994ஆம் ஆண்டிலிருந்து 1.6 – 1.7க்கு இடையில் இருந்தது. அதன்பின் 2020ஆம் ஆண்டு 1.3 ஆக இருந்தது. அதுவே 2021ஆம் ஆண்டு 1.15 ஆக இருந்தது.

இதுவே ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் மொத்த கருவுறுதல் விகிதம் 1.6ஆக உள்ளது. அதுவே ஜப்பானில் 1.3 ஆக இருந்தது.

சீனா

பட மூலாதாரம், Getty Images

சீனா 2016ஆம் ஆண்டு தனது ஒரு குழந்தை திட்டத்தை ஒழித்துவிட்டு கடந்த ஆண்டு வரிச் சலுகைகளுடன் கூடிய மூன்று குழந்தை திட்டத்தை அறிமுகப்படுத்திய பின்னும் இந்த நிலை தொடர்கிறது.

இம்மாதிரியாக அரசு திட்டங்களை வழங்கியும் சீன பெண்கள் குழந்தை பெற்றுகொள்வதற்கு ஏன் விரும்பவில்லை என்பதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

முதல் காரணம் சீன மக்கள் சிறிய குடும்பங்களுக்கு பழகியிருக்கலாம். இரண்டாம் காரணம் விலைவாசி உயர்வு, மூன்றாவது காரணமாக சிலர் எண்ணுவது, திருமண வயது அதிகரித்திருப்பது. ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு திருமணம் செய்து கொள்ளும் போது குழந்தை பெற்றுக் கொள்வதற்கான ஆர்வம் குறைகிறது. அல்லது குழந்தை பிறப்பதில் மேலும் தாமதமாகிறது.

இது அனைத்தையும் தாண்டி சீனாவில் குழந்தை பெற்றுக் கொள்ளும் வயதில் குறைந்த அளவிலான பெண்களே உள்ளனர். 1980ஆம் ஆண்டிலிருந்து ஒரே ஒரு குழந்தையை மட்டும் பெற்றுக் கொள்ள மக்கள் விரும்புவதால், பல தம்பதியினர் ஆண் குழந்தையை மட்டுமே விரும்பினர். இதனால் 106 ஆண் குழந்தைகளுக்கு 100 பெண் குழந்தைகள் என்ற நிலை ஆனது.

சீனாவின் மக்கள்தொகை எதிர்பார்த்ததைவிட வெகு சீக்கிரமாக குறையும் நிலையை எட்டியது.

‘த ஷாங்காய் அகாடமி ஆஃப் சோஷியல் சயின்ஸஸ்’ 2021ஆம் ஆண்டுக்கு பிறகு சீனாவில் ஆண்டுதோறும் 1.1 சதவீத அளவில் மக்கள் தொகை குறையும் என்று கணித்தது. இதே கணக்கில் சென்றால் 2100-ல் 587 மில்லியனாக இருக்கும். இது தற்போது இருக்கும் மக்கள்தொகையை காட்டிலும் பாதியளவே ஆகும்.

இம்மாதிரியாக குழந்தை பிறப்பில் ஏற்படும் வீழ்ச்சி சீனாவின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதேபோல, சீனாவின் உழைக்கும் மக்கள்தொகை 2014ஆம் ஆண்டு உச்சத்தை அடைந்தது. ஆனால், இதுவே 2100ஆம் ஆண்டு மூன்றில் ஒரு பங்காக அது குறையும் என்று கணிக்கப்படுகிறது.

அதாவது, தற்போது 20 முதியவர்களுக்கு ஆதரவாக பணிபுரியும் வயதில் உள்ள நபர்கள் 100 பேர் இருக்கிறார்கள் என்றால், அதுவே 2100 ஆம் ஆண்டு 120 முதியவர்களுக்கு 100 பணிபுரியும் நபர்கள் இருப்பார்கள்.

சீனா

பட மூலாதாரம், Getty Images

சீனாவின் உழைக்கும் வயதில் உள்ள இஞைர்களின் எண்ணிக்கை குறைகிறது என்றால், அது பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதுவே எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் உற்பத்தி திறன் அதிகம் இருந்தால் தப்பித்துக் கொள்ளலாம்.

குறையும் பணியாட்களின் எண்ணிக்கை, இதனால் அதிகரிக்கும் கூலி ஆகிய காரணங்களால் உற்பத்தி நிறுவனங்கள் சீனாவை விட்டு வங்கதேசம், இந்தியா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

ஏற்கெனவே, சீனாவில் உற்பத்தி செலவு என்பது வியட்நாமை காட்டிலும் இரு மடங்காக உள்ளது.

அதேபோல, அதிகரிக்கும் முதியவர்களின் மக்கள்தொகையால் சுகாதாரம், மருத்துவம் மற்றும் முதியவர்களின் சேவைகளில் சீனா அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

மேலும், வளங்கள் நிறைந்த ஆஸ்திரேலியா போன்ற ஏற்றுமதி நாடுகள் சீனாவில் ஏற்படும் இந்த மாற்றத்தால் பிற ஏற்றுமதி சந்தையை நாட நேரிடும். அதேபோல, அமெரிக்கா போன்ற இறக்குமதி நாடுகள் புதிய மற்றும் வளரும் உற்பத்தி மையங்களை நோக்கி படையெடுக்கும்.

இருப்பினும் இந்த மக்கள் தொகை குறித்த அனுமானங்கள் ஒரு பக்கம் இருக்க, இந்த மக்கள்தொகை கணிப்புகள் அண்டை நாடான இந்தியாவிற்கும் செல்லலாம். அடுத்த சில ஆண்டுகள் இந்தியா, மக்கள் தொகையில் சீனாவை முந்தும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »