Press "Enter" to skip to content

கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்தது அமெரிக்க உச்ச நீதிமன்றம் – முழு விவரம்

பட மூலாதாரம், EPA

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இதன் மூலம் கருக்கலைப்பு செய்வது இனி சட்டப்படி குற்றமாகும்.

அமெரிக்காவில் 1973ஆம் ஆண்டில் ரோ மற்றும் வேட் இடையிலான வழக்கில், ‘கருக்கலைப்பு என்பது பெண்ணின் தனிப்பட்ட உரிமை, அது அரசியலமைப்பு உரிமை’ என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதேபோல, 1992ஆம் ஆண்டில் பெனிசில்வேனியா மற்றும் கேசே இடையிலான வழக்கில், ’22 முதல் 24 வார கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டபூர்வமாக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்’ என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று வெளியாகியுள்ள தீர்ப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைகள் மாற்றப்படும். கருக்கலைப்பு நடைமுறைக்கு தடை விதிக்க இனி மாகாணங்கள் ஒவ்வொன்றாக நடவடிக்கை மேற்கொள்ளும்.

இந்த தீர்ப்பு குறித்த மேலதிக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »