Press "Enter" to skip to content

மனிஷா ரூபேட்டா: பாகிஸ்தானில் டிஎஸ்பி ஆன முதல் இந்து பெண்

பாகிஸ்தானின் முதல் இந்து பெண் டிஎஸ்பியாக மனிஷா ரூபேட்டா பொறுப்பேற்றிருக்கிறார். மருத்துவம் நீங்கலாக வேறு எந்த படிப்பிலும் பெண்கள் சேரக் கூடாது என்ற சிந்தனை ஆழமாக வேரூன்றிய சமூகத்தில் இருந்து கொண்டு இந்த இலக்கை எப்படி எட்டினார் மனிஷா? இதை அவரே விவரிக்கிறார்.

என் பெயர் மனிஷா ரூபேட்டா. பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த முதல் பெண் காவல் துணை கண்காணிப்பாளர் நான். எனது சொந்த ஊர் சிந்துவுக்கு அருகே உள்ள ஜகோபா பேட் என்ற சிறிய நகரம். எனது பள்ளிப் படிப்பு அனைத்தும் அங்குதான் முடிந்தது. பெண்கள் கல்வி கற்கும் போக்கு அங்கு இல்லை. மேலும், பெண்கள் கல்வி கற்பதற்கு யாரும் முன்னுரிமை கொடுப்பதில்லை.

ஒருவர் உயர்கல்வி படித்தாலும், எம்.பி.பி.எஸ்., படிப்பை தவிர வேறு எந்த படிப்பையும் செய்ய அவர்களுக்கு தேர்வு இருக்காது. அப்படி ஏதாவது படிப்பதாக இருந்தாலும் மருத்துவ படிப்பு மட்டுமே படிக்கலாம். எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்தால், படிப்பை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வில் நான் தகுதி பெறவில்லை. எனவே, உடல் சிகிச்சைப் படிப்பைத் தேர்ந்தெடுத்தேன்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கும் சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பதவிகளில் பெண்கள் இருக்க வேண்டும் என்பது என் கருத்து. பெண் பாதுகாவலர்கள் இந்த நாட்டுக்குத் தேவை. இந்த எண்ணம்தான் என்னை காவல் துறை தொழிலைத் தேர்ந்தெடுக்கத் தூண்டியது.

நான் நமது சமூகத்தின் பிரதிநிதி மட்டுமல்ல. வாழ்க்கையில் எதையாவது சாதிக்க விரும்பும் ஒவ்வொரு பெண்ணையும் நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். சிறிய பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கு கூட பெரிய கனவுகள் இருக்கும்.

இதே போன்ற காரணங்களால், அறிவுசார் இடம்பெயர்வு நடைபெறுகிறது. இங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக ஏராளமானோர் இடம் பெயர்ந்து வருகின்றனர்.

காவல் துறை வேலைக்கு உள்ளூரில் ஆதரவு

அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதே தீர்வு. குற்றம் எதுவாக இருந்தாலும் அது குற்றமே. தவறு, தவறுதான். பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அது ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கிறது.

எனக்கு காவல் துறை வேலை கிடைத்தபோது அமோகமான வரவேற்பு காணப்பட்டது. எங்களைச் சுற்றியுள்ள அனைவரும் என்னைப் பாராட்டினர்.

ஆனால் எனது சில உறவினர்கள் இந்த வேலையை என்னால் நீண்ட நாள் செய்ய முடியாது என்று கூறுகிறார்கள். என்னால் இந்த துறையில் தொடர முடியாது என்றும் கூறி வருகின்றனர்.

மனிஷா ரூபேட்டா

தனிப்பட்ட முறையில் அவர்கள் எனக்கு எதிராக நினைக்கவில்லை. ஆனால் பெண்கள் காவல் துறை அதிகாரியாக முடியாது என்பது,இந்த சமூகத்தில் ஆழமாக பதிந்துள்ள பொதுவான கருத்து. அது அவர்களை அப்படி பேச வைக்கிறது.

அவர்களின் ஒரே மாதிரியான நடத்தை காரணமாக, ஒரு பெண் இதுபோன்ற வேலையை எல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறார்கள்.

ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமூகத்தில் காவல் துறையில் ஆண்கள் மட்டுமே சிறந்து விளங்குவார்கள் என்பது அவர்களின் கருத்து.

இன்னும் ஓரிரு வருடங்களில் அவர்கள் தங்கள் வார்த்தைகளை திரும்பப் பெறுவார்கள் என்று நினைக்கிறேன். அதற்குள்ளாக அவர்களில் ஒருவரே கூட தங்களுடைய வீட்டுப் பெண்களை காவல் துறை தொழிலை தேர்வு செய்ய அனுப்பும் நிலை வரலாம் என்கிறார் மனிஷா ரூபேட்டா.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »