Press "Enter" to skip to content

BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம். எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.

கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம். நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும்.

பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை வேறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அந்த வகையில், இந்த வாரம் கோட்டபாய ராஜபக்ஷ, சீனாவின் யுவான் வாங்-5 மற்றும் இந்தியாவின் துருவ் கப்பல் ஒப்பீடு, எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல், எறும்புகளுக்கு பயந்து ஊரை காலி செய்யும் மக்கள், ஆப்கானிஸ்தானில் இந்துக்கள், சீக்கியர்களின் நிலை ஆகியவை குறித்த ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.

சீனாவின் யுவான் வாங்-5 vs இந்தியாவின் துருவ்

சீனாவின் யுவான் வாங்-5, இந்தியாவின் துருவ்

பட மூலாதாரம், Getty Images

இந்தியப் பெருங்கடல் பகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சீன செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங்-5 வந்திருப்பது, அண்டை நாடான இந்தியாவில் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்த கப்பலால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்ற கேள்விக்கு நேரடியாக பதில் தருவதை இந்திய வெளியுறவுத்துறை தவிர்க்கிறது. அதே சமயம், சீன கப்பலின் தன்மையைக் கருத்தில் கொண்டு அதை ஒருவித சந்தேக பார்வையுடனேயே இந்திய உளவு அமைப்புகள் கவனித்து வருகின்றன.

சல்மான் ருஷ்டி முஸ்லிம்களின் வெறுப்புக்கு ஆளானது ஏன்?

சல்மான் ருஷ்டி

பட மூலாதாரம், PA Media

நியூயார்க்கில் கத்தியால் குத்தப்பட்ட சர் சல்மான் ருஷ்டிக்கு கடந்த அரை நூற்றாண்டாகவே தனது இலக்கியப் பணியின் காரணமாக கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தன.

பிரிட்டிஷ் நாவலாசிரியரான சல்மான் ருஷ்டியின் பல புத்தகங்கள் இலக்கிய உலகில் பிரபலமானவை. அவரது இரண்டாவது நாவலான ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’ 1981ஆம் ஆண்டில் புக்கர் பரிசை வென்றது.

ஆனால் 1988-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அவரது நான்காவது நாவலான தி சாத்தானிக் வெர்சஸ் மிகவும் சர்ச்சைக்குள்ளானது. இதன் தலைப்பை சாத்தானின் வசனங்கள் என்று கூறலாம். இது அதற்கு முன்பு எந்தப் புத்தகமும் சந்திக்காத எதிப்பைச் சந்தித்தது. இஸ்லாமிய உலகம் கொந்தளித்தது.

எறும்புகளுக்கு பயந்து ஊரை காலி செய்யும் மக்கள்

எறும்பு

பட மூலாதாரம், Gopala krishnan

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சுமார் 20 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கரந்தமலை காட்டுப்பகுதியைச் சுற்றி பண்ணக்காடு, உலுப்பகுடி, வேலாயுதம்பட்டி, குட்டூர், குட்டுப்பட்டி, சேர்வீடு, ஆத்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன.

காட்டுப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மேற்கண்ட கிராமத்தினரின் பிரதான தொழில் விவசாயம் மற்றும் கால்நடைகளைப் பராமரிப்பது. இந்த மலைப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அதிகப்படியான எண்ணிக்கையில் எறும்புகள் பரவத் தொடங்கின.

ஆப்கானிஸ்தானில் இந்துக்கள், சீக்கியர்களின் நிலை

ஆப்கானிஸ்தானில் இந்துக்கள், சீக்கியர்களின் நிலை எப்படி? பிபிசி கள நிலவரம்

ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்தது. இத்தகைய சூழ்நிலையில், தலைநகர் காபூல் உள்ளிட்ட பிற பகுதிகளில் பெரிய தீவிரவாத குண்டுவெடிப்புகள் அல்லது தாக்குதல்களால் பதற்றம் நிலவுகிறது.

சண்டை முடிந்து விட்டது, ஆனால் நாட்டில் அமைதி ஏற்படவில்லை என்றே தோன்றுகிறது.

கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு அடுத்த வாரம் திரும்புகிறாரா?

கோட்டாபய ராஜபக்

பட மூலாதாரம், Getty Images

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் 24ம் தேதி மீண்டும் தாயகம் திரும்பவுள்ளதாக ராஜபக்ஷ குடும்பத்தின் உறவினரும், ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவிக்கின்றார்.

ரஷ்யாவுக்கான தூதுவராக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில், இடம்பெற்றதாக கூறப்படும் மிக் (MIC) விமான கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று இடம்பெற்றது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »