Press "Enter" to skip to content

ஜூடோவில் தங்கம் வென்ற மாற்றுத்திறனாளி சௌந்தர்யா – தடைகளைத் தகர்த்து சாதித்தது எப்படி?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜூடோவில் தங்கம் வென்ற மாற்றுத்திறனாளி சௌந்தர்யா – தடைகளைத் தகர்த்து சாதித்தது எப்படி?

ஏற்காட்டில் உள்ள குண்டூர் மலை கிராமத்தைச் சேர்ந்தவர், மாற்றுத்திறனாளி மாணவி சௌந்தர்யா. இவர் இந்திய அளவிலான ஜூடோ விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இவரது தந்தை சிவனேசன், தாய் மலர்க்கொடி. இவர்கள் ஏற்காட்டில் கூலி வேலை செய்து வருகிறார்கள். செளந்தர்யாவுக்கு கேட்கும் மற்றும் பேசும் திறன் இல்லை.

அதனால் அவர் சேலம் அயோத்தியா பட்டினம் பகுதியில்உள்ள தமிழக விழி இழந்தோர் சங்கத்தினர் நடத்தும் தங்கும் விடுதியில் தங்கி உடையாப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இவருக்கு ஜூடோ விளையாட்டில் ஆர்வம் இருந்ததைத் தெடர்ந்து, ஜூடோ பயிற்சியாளர் மகேஸ்வரன் கடந்த 7 ஆண்டுகளாக சௌந்தர்யாவுக்கு ஜூடோ பயிற்சி அளித்து வருகிறார்.

அவரிடம் ஜூடோ பயிற்சி பெற்ற சௌந்தர்யா மாவட்ட மற்றும் மாநில அளவிலான பல போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »