Press "Enter" to skip to content

அமேசான் காடுகளில் 26 வருடங்களாக வாழ்ந்த கடைசி பூர்வகுடி மனிதர் மரணம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமேசான் காடுகளில் 26 வருடங்களாக வாழ்ந்த கடைசி பூர்வகுடி மனிதர் மரணம்

பிரேசிலில் மக்கள் தொடர்பற்று இருந்த பூர்விக குழுவில் எஞ்சியிருந்த கடைசி பூர்வகுடி மனிதர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பெயர் தெரியாத அந்த நபர் கடந்த 26 ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்தார். அவரது உடல் ஆகஸ்ட் 23ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 26 ஆண்டுகளாக பெயர் தெரியாத அந்த மனிதர் பிறருடன் எந்தத் தொடர்புமின்றித் தனிமையில் வாழ்ந்து வந்தார். அவர் குழி மனிதன் என்று அழைக்கப்பட்டார். காரணம் விலங்குகளைப் பிடிக்கவும் தான் பாதுகாப்பாகப் பதுங்கிக் கொள்ளவும் ஆழமான குழிகளைத் தோண்டி வாழ்ந்து வந்துள்ளார் அவர்.

அவரது குடிசைக்கு வெளியில் ஒரு தொங்கும் கயிற்றுக் கட்டிலில் ஆகஸ்ட் 23ஆம் தேதி இவரது சடலம் காணப்பட்டது. அவர் மீது வன்முறை தாக்குதல் எதுவும் நடந்ததற்கான அறிகுறி எதுவும் காணப்படவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »