Press "Enter" to skip to content

பால்மோரல் கோட்டை – ராணி நேசித்த ஸ்காட்லாந்து வீடு

பட மூலாதாரம், Getty Images

ராயல் டீசைடில் உள்ள பால்மோரலில் உள்ள தனது வீட்டின் மீதான ராணி இரண்டாம் எலிசபெத்தின் காதல் அனைவரும் அறிந்ததே.

அவர் பெரும்பாலும் கோடைக் காலங்களை அவரது கணவர் பிலிப் மற்றும் குடும்பத்தினருடன் அபெர்டீன்ஷையரில் உள்ள 50,000 ஏக்கர் நிலப்பரப்பில் கழித்தார்.

கிராமங்கள் சூழ்ந்த பால்மோரல் கோட்டையில், அவர் குழந்தையாக இருந்தபோது, அவரது தாத்தா அரசர் ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் பாட்டி ராணி மேரி ஆகியோருடன் சென்றது முதல், அவரது வாழ்க்கையின் இறுதி மாதங்கள் வரை, அவர் பல விடுமுறைகளை மகிழ்ச்சியாக கழித்தார்.

1960இல் பால்மோரல் மைதானத்தில் ராணி மற்றும் இளவரசர் பிலிப் குழந்தைகளுடன் இளவரசி அன்னே, இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் இளவரசர் சார்லஸ் (இடமிருந்து வலமாக)

பட மூலாதாரம், Getty Images

அவர் அங்கு ஏராளமான அரச தோட்ட விருந்துகளை நடத்தினார். அருகிலுள்ள பிரேமர் ஹைலேண்ட் விளையாட்டு தளத்தில், மற்ற அரச குடும்ப உறுப்பினர்களுடன் பல நிகழ்வுகளைப் பார்த்து மகிழ்ந்தார்.

இளவரசர் பிலிப் வாழ்ந்த இறுதியான சில ஆண்டுகளின் பெரும் பகுதியை ராணி அவருடன் பால்மோரலில் கழித்தார். அவர்கள் ஊரடங்கின்போது ஒன்றாக தங்கியிருந்தனர். அவர்கள் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தங்கள் 73 வது திருமண தினத்தைக் அங்கு கழித்தனர்.

விக்டோரியா மகாராணியின் கணவரான இளவரசர் ஆல்பர்ட்டால் ஃபார்குஹார்சன் குடும்பத்திடமிருந்து எஸ்டேட் மற்றும் அதன் கோட்டை வாங்கப்பட்ட 1852ஆம் ஆண்டு முதல் பால்மோரல் பிரிட்டன் அரச குடும்பத்தின் வசிப்பிடங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அதன்பிறகு, அந்த வீடு மிகவும் சிறியதாக காணப்பட்டது. அதையடுத்து தற்போதைய பால்மோரல் கோட்டை உருவாக்கப்பட்டது.

பால்மோரல் கோட்டை 1852 முதல் அரச குடும்பம் வசிக்கும் இடமாக இருந்து வருகிறது.

பட மூலாதாரம், Getty Images

இந்த கோட்டையே ஸ்காட்லாந்தின் பரோனியம் என்ற கட்டிடக்கலைக்கு ஓர் உதாரணம். மேலும் இந்த கட்டடம், ஹிஸ்டாரிக் என்விரோன்மெண்ட் ஸ்காட்லாந்து (Historic Environment Scotland) ‘ஏ’ வகையில் பட்டியலிடப்பட்ட கட்டடமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய கோட்டை 1856இல் கட்டி முடிக்கப்பட்டது. சிறிது காலத்திற்குப் பிறகு பழைய கோட்டை இடிக்கப்பட்டது.

மேலும், கிரவுன் எஸ்டேட்டிற்கு சொந்தமான பகுதி இல்லை இது. இது ராணியின் தனிப்பட்ட சொத்தாக உள்ளது.

இது ரெட் க்ரோஸ் பறவை வேட்டையாடும் பகுதி, வனவியல் மற்றும் விவசாய நிலங்கள், அத்துடன் நிர்வகிக்கப்படும் மான்கள், ஹைலேண்ட் கால்நடைகள் மற்றும் குதிரைவண்டிகள் ஆகியவை கொண்ட எஸ்டேட்.

1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி, இளவரசி டயானா இறந்தபோது அரச குடும்பம் பால்மோரலில் இருந்தது. அது ஆரம்பத்தில் பின்விளைவுகளின் மையமாக மாறியது.

க்ராத்தி தேவாலயத்தில் ஒரு தொழுகையில் கலந்துகொண்ட பிறகு, ராணியும் அரச குடும்பமும் 1997ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பால்மோரல் கோட்டையின் வாயில்களில் இளவரசி டயானாவுக்கு மலர் அஞ்சலி செலுத்தியதைப் பார்க்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

அவர் இறந்த ஞாயிற்றுக்கிழமை காலை, ராணி மற்றும் இளவரசர்கள் சார்லஸ், வில்லியம் மற்றும் ஹேரி ஆகியோர் அருகிலுள்ள க்ராத்தி கிர்க்கில் தேவாலய ஜெபக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அவர்கள் வீடு திரும்பியபோது, பொதுமக்கள் விட்டுச் சென்ற மலர் அஞ்சலி மற்றும் செய்திகளை பார்வையிட்டனர்.

இத்தனை ஆண்டுகளில்,பால்மோரலில் ராணி மற்றும் அவரது குடும்பத்தினரும் எடுத்துக்கொண்ட சில படங்கள் இங்கே:

இளவரசி எலிசபெத் தனது தாத்தா மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் பாட்டிகளான ராணி மேரி ஆகியோருடன் 1932ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், கிராத்தியில் உள்ள தேவாலயத்திற்குச் சென்று பால்மோரலுக்குத் திரும்பும் வழியில்

பட மூலாதாரம், Getty Images

1951இல் பால்மோரல் கோட்டைக்கு சென்ற அரச குடும்பம் - தனது குழந்தைகளான இளவரசர் சார்லஸ் (இடது) மற்றும் இளவரசி அன்னே ஆகியோருடன் இளவரசி எலிசபெத்

பட மூலாதாரம், Getty Images

ராணி இரண்டாம் எலிசபெத் தனது குழந்தைகளான சார்லஸ் (வலது) மற்றும் அன்னே ஆகியோருடன் 1952இல் பால்மோரலில் புகைப்படத்திற்காக பாவனை கொடுத்தார்.

பட மூலாதாரம், Getty Images

1952 ஆம் ஆண்டு ராணி கோட்டை ஜன்னல்களில் இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி ஆன் உடன் விளையாடுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

பால்மோரல் கோட்டையின் மைதானத்தில் தனது மகனும் இளவரசருமான சார்லஸ் பொம்மை காரில் செல்வதை பார்க்கும் ராணி

பட மூலாதாரம், Getty Images

1959ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பால்மோரல் கோட்டையில் ராணி மற்றும் இளவரசர் பிலிப்புடன் அதிபர் ஐசனோவர்

பட மூலாதாரம், Getty Images

1972இல் பால்மோரலில் ஹைலேண்ட் கால்நடைகளுடன் வயலில் ராணி எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப்

பட மூலாதாரம், Getty Images

1972இல் பால்மோரலில் தனது படிப்பறையில் அமர்ந்திருக்கும் இளவரசர் எலிசபெத்

பட மூலாதாரம், Getty Images

1979ஆம் ஆண்டு நவம்பர் 20ம் தேதியன்று பால்மோரலில் அவர்களது 32வது திருமண நாளில், அவர்களின் மூன்று மகன்களான எட்வர்ட், சார்லஸ் மற்றும் ஆண்ட்ரூ ஆகியோருடன் ராணி எலிசபெத் மற்றும் எடின்பர்க் கோமகன் பிலிப்

பட மூலாதாரம், AFP

2005ஆம் ஆண்டு பால்மோரல் கோட்டையில் விடுமுறையைக் கழித்த ராணியும் இளவரசர் பிலிப்பும்

பட மூலாதாரம், ANWAR HUSSEIN COLLECTION/ROTA

2006ஆம் ஆண்டு, பிரேமர் கூட்டத்தின் போது நடந்த கயிறு இழுத்த போட்டியை கண்டுச் சிரிக்கும் ராணியும் அரச குடும்ப உறுப்பினர்களும்

பட மூலாதாரம், Getty Images

2012இல் பால்மோரல் கோட்டையில் ஒரு தோட்ட விருந்தில் கலந்து கொண்ட ராணி

பட மூலாதாரம், Getty Images

2014ஆம் ஆண்டு கிளாஸ்கோவொவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாக, காமன்வெல்த் பேட்டனில் எடுத்துச் செல்லப்பட்ட குறிப்பு செய்தியில் கையெழுத்திடுகிறார் ராணி.

பட மூலாதாரம், Getty Images

2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராணி கேம்பிரிட்ஜின் கோமகன் மற்றும் சீமாட்டியுடன் கிராத்தி கிர்க்கிற்கு வருகிறார்.

பட மூலாதாரம், Getty Images

2021இல் ஆகஸ்ட் மாதம் கோட்டையில் கோடைக்காலத்தில் தங்கும்போது, பால்மோரலில் உள்ள வாயில்களில் உள்ள 'ஸ்காட்லாந்தின் 5 பட்டாலியன் தி ராயல் ரெஜிமென்ட்டை' பார்வையிடுகிறார் ராணி.

பட மூலாதாரம், Getty Images

2021ஆம் ஆண்டு அக்டோபரில் பால்மோரல் எஸ்டேட்டின் கிரிக்கெட் பெவிலியனில் க்ராத்தி பிரைமரி பள்ளியைச் சேர்ந்த குழந்தைகள் ராணிக்கு ஒரு அட்டையை வழங்குகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images

செவ்வாய்கிழமையன்று பால்மோரலில் உள்ள அறையில் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸை வரவேற்கும் ராணி எலிசபெத்

பட மூலாதாரம், Getty Images

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »