Press "Enter" to skip to content

அரசின் உண்மை சரிபார்ப்பு குழு போலியான, திசைதிருப்பும் செய்திகளை பரப்பிய தருணங்கள்

பட மூலாதாரம், Getty Images

ஒரு செய்தி போலியா இல்லையா? இதைத் தீர்மானிக்கும் பணியை, இந்திய அரசின் தகவல் வழங்கும் அமைப்பான பிரஸ் இன்ஃபர்மேஷன் ப்யூரோ அதாவது பிஐபியின் உண்மை சரிபார்ப்புக் குழு மேற்கொள்ளும்.

அதாவது PIB ஒரு செய்தியை அல்லது உள்ளடக்கத்தை போலி என்று அழைத்தால், அந்த செய்தி சமூக ஊடகங்கள் உட்பட எல்லா கணினிமய தளங்களிலிருந்தும் அகற்றப்படும்.

தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப விதிகள் தொடர்பான புதிய திருத்தப்பட்ட வரைவின் முன்மொழிவை தனது இணையதளத்தில் பகிர்ந்துள்ளது.

இந்த புதிய விதிகள் தற்போதைக்கு முன்மொழிவுகள் மட்டுமே. ஆனால் இது கருத்து சுதந்திரத்தைத் தடுக்கும் முயற்சி என்று எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட அமைப்புகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. அதே நேரத்தில், அரசின் நோக்கம் குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

 “மோதி அரசு கணினிமய செய்திகளை சரிபார்த்தால், மத்திய அரசு மீது யார் உண்மை சரிபார்ப்பை செய்வது,” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேடா கூறியுள்ளார்.

இந்த முன்வரைவில், ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் காணொளி கேம்கள் தொடர்பான விதிகள் குறித்த யோசனைகள்  முக்கியமாக முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த முன்மொழிவின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் ஆபத்துகள் என்ன என்பதைப் புரிந்துகொள்ள இப்போது முயல்வோம்.

கடந்த காலங்களில் எப்போது PIB யின் உண்மை சரிபார்ப்புக் குழு சில விமர்சங்களை போலிச் செய்தி என்று குறிப்பிட்டது மற்றும் எப்போது அதுவே போலியான அல்லது தவறான செய்திகளைப் பரப்புவதில் ஈடுபட்டுள்ளது என்று பார்ப்போம்.

முன்மொழிவில் என்னென்ன உள்ளது?

  • PIB எந்த செய்தியையும் போலி என்று சொன்னால் அந்த செய்தி நீக்கப்பட வேண்டும்.
  • அரசுடன் தொடர்புடைய நிறுவனம் ஏதோ ஒன்றை திசை திருப்புவதாக அழைத்தால், அந்த உள்ளடக்கம் கணினிமய தளத்திலிருந்து அகற்றப்படும்.
  • PIB போலி செய்தி என்று கூறினால், இணைய வழங்குநர்களும் லிங்க்கை அகற்ற வேண்டும்.
  • முகநூல், ட்விட்டர், யூடியூப் போன்ற தளங்களில்கூட இதுபோன்ற செய்திகள் இருக்கக்கூடாது.
  • PIB-க்கு அளிக்கப்படும் அதிகாரம், 2000வது ஆண்டின் IT சட்டத்தின் பிரிவு 69A-இன் கீழ் வருகிறது.
  • எது போலி என்று கருதப்படும், எது இல்லை என்பது பற்றிய தெளிவான முன்மொழிவில் இல்லை.

இந்த வரைவுக்கு Internet freedom foundation என்ற அமைப்பு தனது ஆட்சேபத்தைத் தெரிவித்துள்ளது.

பிஐபி தானே எப்போதெல்லாம் போலிச் செய்திகளைப் பரப்பியுள்ளது?

பிஐபி உண்மை சரிபார்ப்புக்குழு 2019இல் உருவாக்கப்பட்டது. அரசு, அமைச்சகங்கள், துறைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான செய்திகளை ஆய்வு செய்வது அல்லது சரியான தகவல்களை வழங்குவது இதன் நோக்கம்.

சமூக ஊடக தளங்களைப் பார்த்தால், அரசு தொடர்பான எந்த ஒரு ‘பொய்யான’ அல்லது ‘திசை திருப்பும்’ தகவல்களையும் போலி என்று அழைக்கும் வேலையை PIB Fact Check குழு செய்து கொண்டிருப்பதைக் காணலாம். இருப்பினும், ஓர் உண்மை எப்படி, ஏன் பொய்யாகிறது என்பதை PIB உண்மைச் சரிபார்ப்புக் குழு விரிவாகக் கூறுவதில்லை. சில சந்தர்ப்பங்களில், வாட்ஸ்அப் ஃபார்வர்டு செய்திகளைக்கூட போலியானது அல்லது தவறாக வழிநடத்துவது என்று இந்தக் குழு சமூக ஊடகங்களில் கூறியுள்ளது.

உண்மை சரிபார்ப்புக் குழுவே போலியான செய்திகளையோ அல்லது தவறான, பொய்யான தகவல்களையோ பகிர்ந்துள்ள பல சந்தர்ப்பங்களும் உள்ளன.

உதாரணத்திற்கு:-

1. 2020ஆம் ஆண்டில், புலனாய்வுப் பணியகத்தின் ஆட்சேர்ப்பு அறிவிப்பை போலியானது என்று பிஐபி கூறியது. பின்னர் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டு பிரிவு இந்த சரியான செய்தியை ‘உண்மை சரிபார்ப்பு’ செய்ய முன் வந்தது மற்றும் ஆட்சேர்ப்பு அறிவிப்பு சரியானது என்று கூறியது.

2. 2020 ஜூன் மாதம் PIB Fact Check குழு ஒரு ட்வீட் செய்தது. அதில், “சமூக ஊடகங்களில் மிகுதியாக பகிரப்பட்ட ஒரு செய்தியில், சில செயலிகளை STF பயன்படுத்துவதில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் செய்தி தவறானது. எஸ்டிஎஃப் அத்தகைய அறிவிக்கை எதையும் வெளியிடவில்லை என்று கூறியது.

பிஐபி எப்போதெல்லாம் போலியான அல்லது திசைதிருப்பும் செய்திகளை பரப்பியது

பட மூலாதாரம், PIB

அறிவிப்பின் மீது பொய்யான செய்தி என்று எழுதி அதைத் தவறு என்று பிஐபி உண்மை சரிபார்ப்புக் குழு கூறியது. ஆனால் இந்த அறிவிப்பு சரியானதாகவே இருந்தது. இது குறித்து உ.பி.யின் ஏடிஜி பிரசாந்த் குமாரும் கருத்து தெரிவித்துள்ளார்.

“இதுபோன்ற மென்பொருள் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. பாதுகாப்பிற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான செயலிகளை மட்டுமே கைபேசியில் வைப்பது என்ற முடிவை நாங்கள் எடுக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த நூற்றுக்கணக்கான மக்கள், பிஐபி உண்மை சரிபார்புக்குழு தவறு செய்துவிட்டதாகக் கூறினர். இந்த ட்வீட் பதிவிடப்பட்டு ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகள் ஆன நிலையில், இன்றும் இந்த ட்வீட் அப்படியே உள்ளது. அது நீக்கப்படவும் இல்லை, அது குறித்து எந்த வித விளக்கமும் அளிக்கப்படவும் இல்லை.

3. 2020ஆம் ஆண்டில் கொரோனா காலத்தில் ஷ்ரமிக் தொடர் வண்டிகளில்(புலம் பெயர்ந்தோர் சொந்த இடங்களுக்குத் திரும்பிச்சென்ற ரயில்கள்) ஏற்பட்ட இறப்புகள் தொடர்பான செய்திகள் வந்தபோதும், பிஐபி உண்மை சரிபார்ப்புக் குழு எந்தவிதமான உண்மைகளையும் வழங்காமல் இந்த அறிக்கைகளைப் போலி என்று கூறியதோடு தொடர்வண்டித் துறையின் மறுப்பை பகிர்ந்தது.

இருப்பினும் Alt News போன்ற உண்மை சரிபார்ப்பு இணையதளங்கள் இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் பேசியபோது, ​​அவர்கள் வேறு கதையைக் கண்டறிந்தனர்.

அத்தகைய ஒரு விவகாரம் இர்ஷாத் தொடர்பானது. பால் கிடைக்காமல் நான்கு வயது குழந்தை இர்ஷாத் உயிரிழந்த விவகாரத்தில், குழந்தை நலமுடன் இருந்ததாகவும் சாப்பிட எதுவும் கிடைக்காத இடத்தில் தொடர் வண்டிநிறுத்தப்பட்டதாகவும் குழந்தையின் தந்தை தெரிவித்தார். தொடர் வண்டிமுஸாஃபர்பூரை அடைந்ததும் அங்கிருந்து வெளியே வரக் காத்திருந்தபோது இர்ஷாத் உயிரிழந்தார்.

பிஐபி எப்போதெல்லாம் போலியான அல்லது திசைதிருப்பும் செய்திகளை பரப்பியது

பட மூலாதாரம், PIB

இந்நிலையில் குழந்தைக்கு ஏற்கெனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக தொடர்வண்டித் துறை கூறியது. அந்த நேரத்தில் ஸ்கிரீனிங் மற்றும் சோதனை இல்லாமல் தொடர் வண்டிகளில் பயணிக்க தொடர்வண்டித் துறை அனுமதிக்காதபோது, ​​ஏற்கெனவே நோய்வாய்ப்பட்ட குழந்தையை தொடர் வண்டியில் ஏற அனுமதித்தது எப்படி என்பதே கேள்வி.

அரசின் விவரிப்பு ஏற்புடையதாக இல்லை என்று பிஐபி கருதினால் அதையும் தவறானது அல்லது திசை திருப்புவது என்று அந்த அமைப்பு கூறிய பல சம்பவங்களில் இதுவும் ஒன்று.

4. ‘சத்துணவு திட்டத்திற்கு ஆதார் அட்டை அவசியம்.’

செய்தியாளர் தபஸ்யா இந்தச் செய்தியை அறிக்கைடர்ஸ் கலெக்டிவுக்காக அளித்தார். அந்தச் செய்தியில் ஆவணங்களின் அடிப்படையில் சத்துணவுத் திட்டத்தில் குழந்தைகள் பயன்பெற ஆதார் அட்டை அவசியம் என்றும் அதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

அவர் எழுதிய செய்தியில் அரசு மீதான விமர்சனம் இருந்தது. பிஐபி உண்மை சரிபார்ப்புக் குழு இந்தச் செய்தி போலியானது என்றும் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை தேவையில்லை என்றும் கூறியது. ஆனால், அதற்கான ஆவணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக செய்தியாளர் தபஸ்யா ஆர்டிஐ தாக்கல் செய்தபோது, ​​குழந்தைகளுக்கு ஆதார் அட்டை தேவையில்லை என்று 2022 ஆகஸ்ட்டில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது தெரிய வந்தது. ஆனால் இங்கே சுவாரசியமான விஷயம் என்னவென்றால், தபஸ்யாவின் செய்தி ஜூன் 2022இல் வெளியிடப்பட்டது, அது 2022 மார்ச் வழிகாட்டு நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது.

அதாவது பிஐபி செய்தியை பொய் என்று சொன்னபோது, ​​அந்தச் செய்தியில் எழுதப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அப்போது அப்படித்தான்  இருந்தன.

பிஐபியின் வளர்ந்து வரும் பங்கு ஊடகங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பது ஏன்?

பிஐபியின் அதிகரித்து வரும் பலம், ஊடகங்களுக்கு ஏன் அச்சுறுத்தலாக இருக்கிறது என்பது ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் மீதான பிஐபியின் எதிர்வினைகள் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

மோதி நிர்வாகம் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் ICMR-ஆல் அமைக்கப்பட்ட கோவிட் பணிக்குழுவுடன் கலந்தாலோசிக்கவில்லை அல்லது அதைச் சந்திக்கவில்லை என்று 2020 ஏப்ரலில் ’கேரவன்’ பத்திரிகை தெரிவித்தது.

இந்தச் செய்தி தவறானது என்று விவரித்த ஐசிஎம்ஆர், 14 முறை சந்திப்பு நிகழ்ந்தாகவும் முடிவுகளை எடுக்கும்போது பணிக்குழுவுடன் கலந்தாலோசனை நடைபெற்றதாகவும் கூறியது.

பிஐபி உண்மை சரிபார்ப்புக் குழு இந்த ட்வீட்டிற்கு பதிலளித்தது. கேரவன் வெளியிட்ட செய்தி போலியானது மற்றும் ஆதாரமற்றது என்று கூறியது. ஆனால், அந்தச் செய்தியை எழுதிய செய்தியாளர், சந்திப்புகளில் என்ன நடந்தது என்ற தகவல்களைக் கேட்டபோது, ​​எந்த அமைப்பும்  தகவல்களைத் தெரிவிக்கவில்லை.

இதுபோன்ற பல சந்தர்ப்பங்களில், பல செய்தி இணையதளங்களின் செய்திகள் போலியானவை அல்லது தவறானவை என்று பிஐபியால் அழைக்கப்பட்டன. அந்தச் செய்திகள் அரசை விமர்சிப்பதாகவோ, ஆதாரங்களை மேற்கோள் காட்டி விஷயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வர முயல்வதாகவோ இருந்தன.

“பிஐபி அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற முகமை ஏதேனும் உள்ளடக்கத்தைப் போலி என்று அழைத்தால், அந்த உள்ளடக்கத்தை இணையத்திலிருந்து அகற்றுவது அவசியம் என்று வரைவு கூறுகிறது.

இந்தப் பொறுப்பு, சேவை மற்றும் இணைய வழங்குநரிடம் இருக்கும். இது ஆபத்தானது. ஏனென்றால் ஒரு செய்தி தனக்கு ஏற்ற மாதிரி இல்லை என்று அரசு நினைத்தால், அதை பிஐபி மூலம் போலியானது என்று கூறி அகற்றமுடியும்,” என்று இணைய சுதந்திர அறக்கட்டளையின் கொள்கை இயக்குநர் பிரதீக் வாக்ரே, ’தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டிடம் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »