Press "Enter" to skip to content

மூளைப்புலன்கள் – தூங்கும்போது கட்டிலில் இருந்து ஏன் விழுவதில்லை?

பட மூலாதாரம், Getty Images

இரவில் கண்களை மூடுவதற்கும், காலையில் கண்களைத் திறப்பதற்கும் இடையில், ஆழ்ந்த ஓய்வின் மகிழ்ச்சியை மட்டுமே அறியும் அதிர்ஷ்டசாலிகளில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். ஆனால் நாம் தூங்கும்போது மனமும் உடலும் சுறுசுறுப்பாக இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.

தூங்கும்போது நாம் கனவு காண்பது மட்டுமில்லை, குறட்டை விடுகிறோம், பேசுகிறோம், சிரிக்கிறோம், கத்துகிறோம், உதைக்கிறோம், குத்துகிறோம், உருள்கிறோம்.

ஆனால், மிக சிறிய கட்டிலில் தூங்கினாலும் சரி, அகலமான கட்டிலில் தூங்கினாலும் சரி, எவ்வளவு பரப்பப்பான இரவாக இருந்தாலும் நீங்கள் படுக்கைக்குச் சென்ற இடத்திலேயே நீங்கள் எழுந்திருப்பீர்கள்.

நாம் ஏன் படுக்கையில் இருந்து விழவில்லை?

“இது விசித்திரமானது, ஏனென்றால் தூங்கும்போது, நமது சுற்றுப்புறத்தைவிட்டு முழுமையாக துண்டிக்கப்பட்டு இருப்போம் என்று நாம் எண்ணுகிறோம். ஆனால், அப்படியல்ல; அருகில் யாராவது சத்தம் எழுப்பினால், நீங்கள் விழித்து விடுவீர்கள்” என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரஸ்ஸல் ஃவிளம்பர ஒட்டி பிபிசி க்ரவுட் சயின்ஸிடம் கூறினார்

ஒளி, வெப்பம் அல்லது பிற வெளிப்புற தூண்டுதலுக்கு பதிலளிக்கும் மற்றும் உணர்ச்சி நரம்புக்கு சமிக்ஞையை அனுப்பும் உறுப்பு அல்லது செல்கள் மருத்துவ மொழியில் `ரிசிப்டர்ஸ்` என்று அழைக்கப்படுகிறது. தூக்கத்தில் இருந்தாலும் இந்த ரிசிப்டர்ஸ் மூலம் நமது உடல் தொடர்ந்து தகவல்களை சேகரிக்கின்றன.

“இது கிட்டத்தட்ட ஆறாவது அறிவைப் போன்றது. நாம் குழந்தைகளாக இருக்கும்போது அது  சரியாக வேலை செய்யாது-அதனால்தான் சிலர் படுக்கையில் இருந்து விழுவார்கள்-ஆனால் வயதாகும்போது அது நன்றாகிறது”

எனவே, நாம் தூங்கும்போது உணர்வை இழக்கும் நிலைக்கு செல்வதில்லை.

மூளை

பட மூலாதாரம், Getty Images

ஆறாம் அறிவு?

பொது கலாசாரத்தில், ஆறாவது அறிவு என்பது வெளிப்புற உணர்வு, தெளிவுத்திறன், முன்கணிப்பு, உள்ளுணர்வு, தேவதைகள் மற்றும் பேய்கள் வசிக்கும் உலகத்துடன் தொடர்பு கொள்ளும் திறன் ஆகியவற்றுடன் தொடர்புடையது.

ஆனால், ஃபாஸ்டர் போன்ற விஞ்ஞானிகளுக்கு, அது குறைந்த மறைவான ஒன்று என்று அர்த்தம்.

இது ப்ரோபிரியோசெப்சன் (உடலின் நிலை மற்றும் இயக்கம் பற்றிய கருத்து அல்லது விழிப்புணர்வு) என்று அழைக்கப்படுகிறது, மேலும் வல்லுநர்கள் இதைப் பற்றி ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அறிந்திருக்கிறார்கள். சார்லஸ் ஷெரிங்டன் என்ற அறிவியளாளர் இந்த பதத்தை உருவாக்கினார்.

இது தொடர்பான முன்னோடி ஆய்வுகள் 19 ஆம் நூற்றாண்டில் நரம்பியல் அறிவியலின் சில ஜாம்பவான்களால் மேற்கொள்ளப்பட்டன.

இந்த மில்லினியத்தின் இரண்டாம் தசாப்தம் வரை தெளிவாகத் தெரியாதது என்னவென்றால், நாம் எந்தளவு அது சார்ந்து இருந்தோம் என்பதுதான்.

நீங்கள் அதை செயலில் பார்க்க விரும்புகிறீர்களா?

உங்கள் கண்களை மூடி, பின்னர் உங்கள் வலது ஆள்காட்டி விரலை உங்கள் இடது முழங்கையின் நுனியில் தொடவும்.

மிகவும் எளிதாக இருந்ததா? எப்படி இதை நீங்கள் செய்தீர்கள்?

உங்கள் விரல் நுனி இருக்கும் இடம் உங்களுக்குத் தெரியும், உங்கள் இடது முழங்கையின் நிலையும் உங்களுக்குத் தெரியும்.

மேலும் என்னவென்றால், பார்க்காமலேயே உங்கள் முழு உடல் தோரணையையும் உங்களால்  விவரிக்க முடியும்.

அதுதான் ப்ரோபிரியோசெப்சன்: நமது உடலின் ஒவ்வொரு பகுதியும் எங்குள்ளது என்பது பற்றிய விழிப்புணர்வு.

நமது தசைகள், தசைநாண்கள், மூட்டுகள் மற்றும் தோலில் உள்ள ரிசிப்டர்களிலிருந்து நரம்பு இயற்பியல் சமிக்ஞைகள் மூலம் புரோபிரியோசெப்சன் சாத்தியமாகிறது.  இது தசைகளின் தற்போதைய நீளம் மற்றும் நீட்சி, மூட்டு சுழற்சி, உட்புற மாற்றங்கள் மற்றும் தோலின் நெகிழ்வு ஆகியவற்றைப் பற்றி மூளைக்குத் தெரிவிக்கிறது.

இது நமது மூட்டுகள் எந்த திசையில் நகர்கின்றன என்பதை அறிய அனுமதிக்கிறது, நமது தோரணை மற்றும் சமநிலையை நமக்கு உணர்த்துகிறது.

உதாரணமாக, நீங்கள் சமநிலையை இழக்கும்போது அதை மீண்டும் பெற உதவுகிறது.

என்றாலும், அந்த விஷயத்தில் மற்றொன்றும் முக்கிய பங்கு வகிக்கிறது.

நீங்கள் கண்களை மூடி இருப்பதுபோன்றும் நான் மெதுவாக முன்னே சாய்வதுபோன்றும் நினைத்துகொள்ளுங்கள்.

புவியீர்ப்பு விசையுடன் உங்கள் உடலின் நிலை மாறுவதை நீங்கள் உடனடியாக உணருவீர்கள். உள் காதில் திரவம் நிறைந்த வெஸ்டிபுலர் அமைப்புதான் இதற்கு காரணம்.  இது சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

ஆனால் அவை படுக்கையில் இருந்து விழுவதைத் தவிர்க்க பெரிதும் உதவாது, ஏனென்றால் அவை மூடப்பட்டிருக்கும்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் உள்ள கினீசியாலஜி மற்றும் நரம்பியல் பேராசிரியரை மேற்கோள் காட்டுவதன் மூலம் அதை மீண்டும் மேற்கோள் காட்டுவோம். தி கான்வர்சேசனில் அவர் எழுதுகையில்,“ப்ரோபிரியோசெப்சன் என்பது நமது ‘உலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்பின்’ ஒரு முக்கிய அங்கமாகும், இது நமது அன்றாட வாழ்வில் இன்றியமையாதது, ஏனெனில் நாம் எங்கு நகரவேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடுகிறார்.

“உடலின் ஒவ்வொரு பாகத்தின் நிலை, வேகம் மற்றும் திசையை நாம் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் ப்ரோபிரியோசெப்சன் தீர்மானிக்க உதவுகிறது, இதனால் மூளை நமது இயக்கங்களை வழிநடத்த அனுமதிக்கிறது”

இதன் காரணமாகதான் தூக்கத்தில் நாம் நகர்ந்தாலும் கிழே விழாமல் இருக்க முடிகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »