Press "Enter" to skip to content

நியூஸிலாந்தை வீழ்த்தி கிரிக்கெட்டில் மீண்டும் உச்சத்தை எட்டிய இந்தியா

பட மூலாதாரம், BCCI/ Sportzpics

மட்டையாட்டம், பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கிய இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 3-0 என்ற கணக்கில் தொடரையும் ஒட்டுமொத்தமாக வென்றிருக்கிறது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. 

கேப்டன் ரோஹித் சர்மாவும் சுப்மன் கில்லும் நியூஸிலாந்தின் பந்துவீச்சாளர்களைத் திணறவைத்து அடித்த சதத்தால் இந்திய அணி 385 என்ற பெரிய ரன்குவிப்பை செய்ய முடிந்தது.

ரோஹித் சர்மா 101 ரன்களும், சுப்மான் கில் 112 ரன்களும் அடித்தார்கள். 

முதலில் பேட் செய்த இந்திய அணி அடுத்தடுத்து அடிக்கும் மிகப் பிரமாண்டமான ஸ்கோர்.

ஏறுமுகத்தில் இந்திய ஓட்டத்தை ரேட்

BCCI/ Sportzpics

பட மூலாதாரம், BCCI/ Sportzpics

இந்திய அணி முதலில் பேட் செய்த கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் முறைய 409, 373, 390, 349, 385 என பெரிய அளவில் ரன்களைக் குவித்திருக்கிறது. 

முன்னதாக டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் சான்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆனால் அந்த முடிவு தவறு என்பதை முதல் பத்து ஓவர்களிலேயே இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மாவும், சுப்மான் கில்லும் நிரூபித்து விட்டார்கள்.

அவ்வப்போது 4 ரன்களும், 6 ரன்களும் அடித்து நிதானமாகவும் நீடித்தும் ரன்குவித்த அவர்கள், ஆறாவது ஓவரைத் தவிர பெரிதாக எந்த ஓவரிலும் ரன்களை எடுக்கச் சிரமப்படவில்லை. குறப்பாக 8-ஆவது சுற்றில் 4 பவுண்டரிகளும் ஒரு சிக்சரையும் அடித்தார் சுப்மான் கில்.

அதேபோல் 10-ஆவது சுற்றில் இரண்டு சிக்சர்களையும் ஒரு பவுண்டரியையும் ரோஹித் சர்மா அடித்தார். 10-ஓவர்களில் இந்திய அணி மட்டையிலக்கு இழப்பின்றி 82 ரன்களை எடுத்திருந்தது. 12-ஆவது சுற்றில் சுப்மன் கில் அரைச் சதத்தைக் கடந்தார். 14-ஆவது சுற்றில் ரோஹித் சர்மா ஒரு சிக்சர் அடித்து 50 ரன்களைக் கடந்தார்.

20-ஓவர் முடிவில் இந்திய அணி மட்டையிலக்கு இழப்பின்றி 165 ரன்களை எடுத்திருந்தது. சுப்மான் கில் 77 ரன்களும், ரோஹித் சர்மா 80 ரன்களையும் அடித்திருந்தனர். அவர்களது ஓட்டத்தை குவிப்பு வேகம் ஓரளவு சரிசமமாகவே இருந்தது. எனினும் ரோஹித் சர்மா அதிகப் பந்துகளை எடுத்துக் கொண்டார்.

BCCI/ Sportzpics

பட மூலாதாரம், BCCI/ Sportzpics

26-ஆவது சுற்றில் ரோஹித் சர்மா 83 பந்துகளில் சதம் அடித்தார். இரு பந்துகளுக்குப் பிறகு பவுண்டரி அடுத்து சுப்மான் கில்லும் சதத்தை கடந்தார். அவர் எடுத்துக் கொண்ட பந்துகளின் எண்ணிக்கை 72.

ஆனால் அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ரோஹித் சர்மா ஸ்டம்பை பறிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஆடவந்த கோலி தான் சந்தித்த இரண்டாவது பந்தையே சிக்சருக்கு விரட்டு ரன்குவிப்பை அதிரடியாகத் தொடங்கினார். ஆனால் மறு முனையில் சதமடித்திருந்த சுப்மான கில் 112 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது டிக்னரின் பந்துவீச்சில் கான்வேயிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

கோலி-இஷான் இணை ரன்களைக் குவித்துக் கொண்டிருந்தபோது, ஒரு மோசமான ஓட்டத்தை எடுக்கும் முயற்சியில் இஷான் ஆட்டமிழந்தார். 36 ரன்களை எடுத்திருந்தபோது கோலியுடம் ஆட்டமிழந்தார். 360 டிகிரி ஆட்டக்காரர் என்று புகழப்படும் சூர்யகுமார் யாதவ் 14 ஓட்டங்களில் வெளியேறினார்.

43-ஆவது சுற்றில் வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்தபோது, மறு முனையில் ஹர்திக் பாண்ட்யா நிதானமாக ஆடிக் கொண்டிருந்தார். 44-ஆவது சுற்றில் 2 ரன்களையும், 45-ஆவது சுற்றில் 4 ரன்களையும் மட்டுமே இந்திய அணியால் எடுக்க முடிந்தது. 

BCCI/ Sportzpics

பட மூலாதாரம், BCCI/ Sportzpics

45-ஆவது ஓவருக்குப் பிறகு ரன்குவிப்பு வேகமெடுத்தாலும் அடுத்தடுத்து மட்டையிலக்குடுகளும் விழுந்தன. 49-ஆவது சுற்றில் ஹர்திக் பாண்ட்யா 54 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். 50-ஓவர் முடிவில் இந்திய அணி 385 ரன்களை எடுத்தது. 

ஒரு கட்டத்தில் நானூறு ரன்களுக்கு மேல் இந்தியா எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 26 ஓவர்களில் மட்டையிலக்கு இழப்பின்றி 212 ரன்களை எடுத்திருந்த நிலையில், அடுத்தடுத்து மட்டையிலக்குடுகள் விழத் தொடங்கின. 294 ரன்களுக்கு இந்திய அணி 5 மட்டையிலக்குடுகளை இழந்திருந்தது. அப்போது 11 சுற்றுகள் மீதமிருந்தன. ஆனால் அதன் பிறகும் பெரிய அளவில் ரன்களைக் குவிக்கும் வகையில் யாரும் ஆடவில்லை.

பின்னர் ஆடிய நியூசிலாந்து அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஹர்த்திக்கின் இரண்டாவது பந்தில் ஃபின் ஆலன் ஸ்டம்பை பறிகொடுத்தார். ஆனால் அதன் பிறகு நிகோலஸும் கான்வேயும் மட்டையிலக்குடைக் காப்பாற்றி ஆடத் தொடங்கினார்கள். 

BCCI/ Sportzpics

பட மூலாதாரம், BCCI/ Sportzpics

15-ஆவது ஓவர் வரை ஆடிய நிகோல்ஸ் 42 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு முனையில் கான்வே ஆடிக்கொண்டிருந்தார். ஆனால் 26-ஆவது சுற்றில் ஷ்ரத்துல் தாக்குர் அடுத்தடுத்து இரு மட்டையிலக்குடுகளை வீழ்த்தி நியூசிலாந்துக்கு அதிர்ச்சியளித்தார். மிட்செல், லேதம் ஆகிய இருவரும் அவரது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள். இதன் பிறகு அந்த அணி தடுமாறத் தொடங்கியது.

கடைசியில் 42-ஆவது சுற்றில் அனைத்து மட்டையிலக்குடுகளையும் இழந்த நியூசிலாந்து 295 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கான்வே 138 ரன்களை எடுத்திருந்தார். 

இந்த வெற்றியின் மூலம் 3-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை ஒட்டுமொத்தமாக வென்றிருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »