Press "Enter" to skip to content

“2004-14 வரை ஊழல், நெருக்கடியை மட்டுமே இந்தியா கண்டது” – யுபிஏ ஆட்சி மீது நரேந்திர மோதி காட்டம்

பட மூலாதாரம், Narendra Modi Youtube page screengrab

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது ஊழல், நெருக்கடியை மட்டுமே இந்தியா கண்டதாக பிரதமர் நரேந்திர மோதி குற்றம்சாட்டினார்.

இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவை கூட்டுக்கூட்டத்தில் சமீபத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர் திரெளபதி முர்மூவுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் நரேந்திர மோதி புதன்கிழமை பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் அவரை விமர்சனம் செய்தார். என்ன நடந்தது மக்களவையில்?

“மக்களவையில் முந்தைய காங்கிரஸ் எம்.பி ஒருவரின் உரைக்குப் பிறகு அவரது கட்சியினர் உற்சாகமடைந்திருந்ததை நான் நேற்று பார்த்துக் கொண்டிருந்தேன், அவரது உரைக்கு பிறகு, ஒட்டுமொத்த ‘எகோ சிஸ்டமும்’ (காங்கிரஸ் எம்பிக்களை நையாண்டி செய்யும் வகையில் இவ்வாறு மோதி குறிப்பிட்டார்) உற்சாகத்துடன் துள்ளியபடி, “யே ஹுய் நா பாத்” (இது தானே பேச்சு) என்று மகிழ்ச்சியுடன் கூறினர். அந்த குஷியில் தூங்கியவர்கள் இன்னும் எழுந்திருக்கவில்லை போலிருக்கிறது,” என்று பிரதமர் மோதி குறிப்பிட்டார்.

மோதியின் இந்த பதிலுரைக்கு ஒரு நாள் முன்புதான் மக்களவையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசினார். அப்போது அதானி குழுமத்துக்கும் நரேந்திர மோதி அரசுக்கும் இடையிலான உறவு தொடர்பாக கடுமையான குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி முன்வைத்தார்.

மோதி எப்போதெல்லாம் வெளிநாடு செல்கிறாரோ அந்த நாடுகளுடன் எல்லாம் அதானி ஒப்பந்தம் செய்கிறார் என்று ராகுல் குற்றம்சாட்டினார்.

அவரது உரைக்கு ஆளும் பாரதிய ஜனதா கட்சி எம்பிக்கள் கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தனர்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் உரைக்கு பதில் தரும் வகையில், அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருந்த 10 வருடங்களை விமர்சித்து மோதி பேசினார்.

காங்கிரஸ் ஆட்சி மீது விமர்சனம்

“10 ஆண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நாட்டின் ரத்தத்தை உறிஞ்சி விட்டது. 2004 முதல் 2014 ஆண்டு வரை மோசடிகள் மற்றும் வன்முறைகளின் தசாப்தம் ஆக இருந்தது. கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் நெருக்கடியாக மாற்றிக் கொண்டதுதான் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முத்திரை,” என்று மோதி கூறினார்.

நாடு அடைந்து வரும் முன்னேற்றத்தை பார்க்க முடியாத அளவுக்கு எதிர்க்கட்சிகள் “விரக்தியில் மூழ்கியிருப்பதாக” பிரதமர் மோதி குற்றம்சாட்டினார்.

“2004-14க்கு இடைப்பட்ட காலத்தில் பணவீக்கம் அதிகமாக இருந்தது. வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்போம் என்று உறுதியளித்தனர். ஆனால் அந்த பத்தாண்டுகள் சுதந்திரத்திற்குப் பிறகு மிகவும் ஊழல் நிறைந்ததாக இருந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த பத்து வருடங்களில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி என நாடு முழுவதும் தீவிரவாதத்தின் பிடியில் சிக்கியது. அந்த 10 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீர் முதல் வடகிழக்கு வரை, ஒட்டுமொத்த பிராந்தியமும் வன்முறையைத் தவிர வேறு எதையும் காணவில்லை. அந்த 10 ஆண்டுகளில், உலக அரங்கில் இந்தியா மிகவும் பலவீனமாக இருந்தது.,” என்று மோதி குறிப்பிட்டார்.

மேலும், 2004-14 க்கு இடையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி, கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் நெருக்கடியாக மாற்றியது” என்று மோதி கூறினார். அவர் இவ்வாறு கூறியபோது, ஆளும் கட்சி தரப்பில் இருந்தவர்கள், ஆரவாரத்துடன் ஆமோதிப்பது போல மேஜையை தட்டினர்.

பெருமிதம் தெரிவிக்கும் மோதி

“கடந்த ஒன்பது ஆண்டுகளில் 90,000 க்கும் மேற்பட்ட விண்மீன்ட்அப்களின் வளர்ச்சியை இந்தியா கண்டுள்ளது. இப்போது, ​​விண்மீன்ட்அப் உலகில் நமது நாடு உலகளவில் மூன்றாவது இடத்தை எட்டியுள்ளது” என்று பிரதமர் மோதி கூறினார்.

மிகவும் வளமான மற்றும் பெரிய விண்மீன்ட்அப் சூழ்நிலை நாட்டின் அடுக்கு-2 மற்றும் அடுக்கு-3 நகரங்களை அடைந்துள்ளது என்றும் அவர் கூறினார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் ​​நாட்டில் 100க்கும் அதிகமான யூனிகார்ன்கள் (ரூ. 100 கோடி இலக்கை எட்டிய தனியார் விண்மீன்ட்அப்புகள்) உருவானதாக பிரதமர் மோதி தெரிவித்தார்.

செல்பேசி உற்பத்தியில் உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தை எட்டியுள்ளது என்றும் பிரதமர் மோதி கூறினார்.

இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை வளர்ச்சி தொடர்பான தகவல்களை பட்டியலிட்ட மோதி, உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து அதிகரித்ததன் அடிப்படையில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது என்று பெருமிதப்பட்டார்.

நாடு முழுவதும் அதிகரித்து வரும் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு இணையாக, இந்தியாவின் வளர்ந்து வரும் எரிசக்தி தேவை, உலகின் மூன்றாவது பெரிய எரிசக்தி நுகர்வோர் ஆக விளங்குவதாகவும் பிரதமர் மோதி கூறினார். மேலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி திறனில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கல்வித்துறையில் முன்னேற்றம்

கல்வித்துறையிலும் இந்தியா முன்னேறி வருகிறது என்று கூறிய மோதி, உயர்கல்வியில் சேருபவர்களின் எண்ணிக்கை முதல் முறையாக 4 கோடியை தாண்டியுள்ளதாக தெரிவித்தார்.

பொறியியல், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளும் நாட்டில் வேகமாக வளர்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

விளையாட்டுத் துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க ஆதிக்கம் செலுத்தாத காலத்தை நினைவுகூர்ந்த பிரதமர் மோதி, தற்போது உலக அளவில் அனைத்து விளையாட்டுத் துறைகளிலும் இந்திய வீரர்கள் பிரகாசித்து வருவதாக தெரிவித்தார்.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »