Press "Enter" to skip to content

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து: சட்டசபை தேர்தல் முடிவுகள் 2023 – நேரலை

பட மூலாதாரம், Getty Images

நாகாலாந்து, திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய வட கிழக்கு மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

கடந்த மாதம் இந்த மூன்று மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று அதன் முடிவுகள் வெளியாகிறது.

திரிபுரா மாநிலத்திற்கு பிப்ரவரி 16ஆம் தேதியும், நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு பிப்ரவரி 27ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சியிலோ அல்லது ஆட்சிக் கூட்டணியிலோ உள்ளது.

திரிபுரா

please wait…

திரிபுராவில் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள்.

திரிபுராவில் பாஜக மற்றும் திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி கட்சி தற்போது ஆட்சியில் உள்ளது. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களை பெற்று 25 ஆண்டுகால இடதுசாரி ஆட்சியை புறந்தள்ளி ஆட்சியில் அமர்ந்தது.

நாகாலாந்து

please wait…

நாகாலந்தில் மொத்தம் 60 தொகுதிகள்.

அங்கு தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. நெய்பியோ ரியோ தற்போதைய முதலமைச்சராகவுள்ளார்.

ஆளும் நாகா மக்கள் முன்னணியிலிருந்து பிரிந்து 2018 தேர்தலுக்கு முன்பாக இந்தக் கட்சி 2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

மேகாலயா

please wait…

மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த கன்ராட் சங்மா தற்போது முதலமைச்சராக உள்ளார்.

இந்த தேர்தலில் மம்தா பேனர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் முதன்முறையாக களம் கண்டுள்ளது.

மேகாலயாவில் 60 தொகுதிகள். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 21 இடங்களை பெற்றிருந்தது. தேசிய மக்கள் கட்சி 20 இடங்களை மட்டுமே பிடித்திருந்தது. பாஜக இரு இடங்களை மட்டுமே பெற்றிருந்தது.

தேர்தலுக்கு பிறகு தேசிய மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்து கொண்டது.

தேர்தல் வாக்குறுதிகள்

திரிபுராவில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அன்று திறக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

அதன்பிறகு பாஜக இந்த தேர்தலை “கோவில் மற்றும் தேசியவாதம்” என்ற அம்சத்தில் அணுகும் என நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.

அதேசமயம் திரிபுராவின் இடதுசாரி கட்சிகள் பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டியிருந்தன.

மேகாலயாவில் மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை மற்றும் ஊழலை ஒழிப்பதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது.

மாநிலத்தில் 36 சட்டமன்ற தொகுதியில் ஆண்களின் எண்ணிக்கையை காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் பல்வேறு கட்சிகள் பெண்களை முன்னிலைப்படுத்தி பல வாக்குறுதிகளை வழங்கின.

நாகாலாந்தில், ‘நாகாலாந்தை முன்னேற்றுவோம்’ என்ற அம்சத்தை முன்னிலைப் படுத்தி பாஜக தேர்தலை எதிர்கொண்டது.

காங்கிரஸ் கட்சி, நாகாலாந்தில் ஆட்சியமைத்தால் உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கிடு வழங்கப்படும் மற்றும் முதியவர்களுக்கு மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »