Press "Enter" to skip to content

ஹர்திக் பாண்டியா: புறக்கணிக்கப்பட்ட வீரர், தலைவனாக உயர்ந்த கதை

பட மூலாதாரம், Getty Images

பிப்ரவரி 2022க்கு முன்பு, ஊடகங்களிலும் கிரிக்கெட் உலகிலும் இந்த கிரிக்கெட் வீரரின் உடற்தகுதி குறித்து பல கேள்விகள் எழுந்தன, 2021 ஐபிஎல் தொடரில் மோசமான பந்துவீச்சு செயல்திறன் காரணமாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதுமட்டுமல்ல, அவரது இடத்தை ஒருநாள் போட்டிகளில் வெங்கடேஷ் ஐயரும், சோதனை போட்டிகளில் சர்துல் தாக்கூரும் பிடித்திருந்ததால், இந்திய அணியில் ஆல் ரவுண்டராக அவர் நீடிக்க முடியுமா என்ற கேள்விகளும் அவர் தொடர்பாக எழுப்பப்பட்டன.

பிப்ரவரி 2022 இல் குஜராத் டைட்டன்ஸால் இந்த கிரிக்கெட் வீரர் கேப்டனாக அறிமுகப்படுத்தப்பட்டார், மார்ச் 17, 2023 அன்று, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டியின்போது இதே கிரிக்கெட் வீரர் இந்திய கேப்டனாக களத்தில் காணப்பட்டார்.

பரோடா கிரிக்கெட் அணியில் இருந்து உருவான குஜராத்தி ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவின் கதை இது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்க முடியாத சூழலில் முதன்முறையாக இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பை ஹர்திக் பாண்டியா ஏற்றார்.

ஹர்திக் பாண்டியாவின் கிரிக்கெட் வாழ்க்கை சீராகவும் எளிதாகவும் இருந்தது இல்லை, ஏற்றமும் இறக்கமும் நிறைந்ததாக அவரது கிரிக்கெட் வாழ்க்கை இருக்கிறது.

மார்ச் 17, 2023ல் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி ஹர்திக் பாண்டியாவுக்கும் குஜராத்தைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிக முக்கியமானதாகும். குஜராத்தை சேர்ந்த ஹர்திக் பாண்டியா அந்த போட்டியில் சாதனை ஒன்றை படைத்திருந்தார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் அறிமுகமான 1974ஆம் ஆண்டில் இருந்து குஜராத் மாநிலத்திற்காக விளையாடிய த குஜராத்தி வீரர் ஒருவர் இந்திய ஒருநாள் அணிக்கு தலைமை தாங்குவது அதுவே முதல்முறை.

இதற்கு முன்பாக, குஜராத்தைச் சேர்ந்த அஜய் ஜடேஜா 1998-1999 காலக்கட்டத்தில் 13 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளார். ஆனால், அவர் குஜராத்திற்காக சௌராஷ்ட்ரா, பரோடா அல்லது குஜராத் கிரிக்கெட் சங்கம்) உள்ளூர் போட்டிகளில் விளையாடியது இல்லை.

ஐபிஎல் 2023

பட மூலாதாரம், Getty Images

  • 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக அறிவிக்கப்படும்போது, கேப்டன்ஷிப் தொடர்பான எந்தவொரு அனுபவமும் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்தது இல்லை.
  • மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் தங்கள் அணியில் இருந்து அவரை விடுவித்திருந்தது. காயம் காரணமாக ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு தொடர்பாகவும் கேள்விகள் எழுந்தன.
  • ஐபிஎல் 2022ல் ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடுகள் கிரிக்கெட் உலகை மிகவும் கவர்ந்தது. சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா மீண்டும் திரும்புவதே கேள்விக்குறி என இருந்த நிலையில், இந்திய டி20 அணியை வழிநடத்தும் பொறுப்பு அவரைத் தேடி வந்தது.
  • தற்போது ஐசிசியை வெளியிட்டுள்ள சிறந்த ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியாவின் பெயர் முதல் 5 இடங்களுக்குள் உள்ளது. அவர் தற்போது 2வது இடத்தில் உள்ளார்.
  • தற்போது, டி20, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா உள்ளார்.

ஹர்திக் பாண்டியாவுக்குள் மாற்றத்தை ஏற்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் பதவி

2022ல் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் குஜராத் அணி கோப்பையை வென்றதற்கு ஹர்தி பாண்டியாவின் கேப்டன்ஸியும் முக்கிய காரணமாக நம்பப்படுகிறது.

2022 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக அறிவிக்கப்படும்போது, கேப்டன்ஷிப் தொடர்பான எந்தவொரு அனுபவமும் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்தது இல்லை.

மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் அணியில் இருந்து அவரை விடுவித்திருந்தது. காயம் காரணமாக ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு தொடர்பாகவும் கேள்விகள் எழுந்தன.

ஆனால், 2022 ஐபிஎல் தொடர் தொடங்கியதும் தனக்கு எதிராக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு தனது சிறப்பான செயல்பாடுகள் மூலம் ஹர்திக் பாண்டியா முற்றுப்புள்ளி வைத்தார்.

அவரது பொறுமை, களத்தில் அவரது திறமை இரண்டும் ரசிகர்களின் கவனத்தை பெறத் தொடங்கியது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அவர் 4வது வீரராக களமிறங்கி விளையாடினார்.

பொதுவாக ஆறாவது, ஏழாவது போன்ற இடங்களில் தான் ஹர்திக் பாண்டியா களமிறங்குவார். ஆனால் இந்த வழக்கத்தை உடைத்து, அவர் தனது மட்டையாட்டம்கில் ஒரு ஒழுக்கத்தை பராமரித்து, அணி அடுத்தடுத்து போட்டிகளில் வெற்றி பெற வலுவான மன உறுதியை வழங்கினார்.

ஐபிஎல் 2023

பட மூலாதாரம், ANI

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதற்கு வீரர்களுக்கிடையேயான போட்டி மிகவும் கடுமையானது. காயம் காரணமாக ஒருவரின் உடற்தகுதி குறித்து கேள்வி எழுந்தால் அணிக்கு பல்வேறு தேர்வுகள் இருக்கும். ஆனால், ஒரு வீரர் தனது உடற்தகுதியை மீண்டும் பெறும்போது, தனது சிறப்பான ஆட்டம் மூலம் தனது திறமை, செயல்திறன் இரண்டையும் அவர் மீண்டும் நிரூபித்தாக வேண்டும்.

ஐபிஎல் 2022 இல் ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு கிரிக்கெட் உலகை மிகவும் கவர்ந்தது. இதனால், இந்திய அணிக்காக மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் பங்கேற்பதே கடினம் என்று பேசப்பட்ட நிலை மாறி, ஹர்திக் பாண்டியாவை இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழத் தொடங்கின.

இந்திய டி20 அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியா

ரோகித் சர்மா, விராத் கோலி ஆகியோர் பங்கேற்க முடியாத சூழ்நிலையில், அயர்லாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் ஹர்தி பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த இரு தொடர்களின் முடிவும் சாதகமாகவே அமைந்தது.

அதுமட்டுமல்ல, 2022 ஆகஸ்டில் ஐசிசி வெளியிட்ட வீரர்களில் செயல்திறன் தொடர்பான புதிய பட்டியலில் ஆல் ரவுண்டர் பிரிவில் முதல் ஐந்து இடங்களுக்குள் அவர் பெயர் இடம்பெற்றது. அவரது கிரிக்கெட் வாழ்வில் இத்தகைய உயர் இடத்தை பிடிப்பது அதுவே முதன்முறை.

2022ல் நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி ஐந்து மட்டையிலக்கு வித்தியாசத்தில் வியத்தகு வெற்றியைப் பெறுவதற்கு விராட் கோலிக்கு ஹர்திக் பாண்டியா போதிய பங்களிப்பை வழங்கினார். அந்த ஆட்டத்தில் 3 மட்டையிலக்குகளை கைப்பற்றிய பாண்டியா மட்டையாட்டம்கில் 33 ரன்களை எடுத்திருந்தார்.

ஐபிஎல் 2023

பட மூலாதாரம், Getty Images

வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா

இன்னும் சில மாதங்களில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. ஹர்திக் பாண்டியா வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ( ஒருநாள் மற்றும் டி20) இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்து வருகிறார். ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா தனது மட்டையாட்டம், பந்துவீச்சு என இரண்டையும் மேம்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

அதுமட்டுமின்றி, ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலக சோதனை சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஹர்திக் பாண்டியாவை சேர்க்கலாம் என்ற பேச்சும் வேகமெடுத்துள்ளது. ஆனால், சோதனை போட்டிக்கு முழுமையாக தகுதிபெறும்வரை சோதனை கிரிக்கெட் போட்டிக்கு திரும்பபோவதில்லை என்று ஹர்திக் பாண்டியா கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சோதனை போட்டிக்கு போதிய பங்களிப்பை தான் இன்னும் வழங்கவில்லை என்று அவர் எண்ணுகிறார். எனவே, சோதனை போட்டிக்கான அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள வீரர்களில் ஒருவராக கூட அவர் தன்னை கருதவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »