Press "Enter" to skip to content

Vijay அப்படி என்ன மாயம் செய்தாரோ: மீண்டும் விஜய்யை இயக்கும் ‘கதை’ இயக்குநர்

Samayam Tamil | Updated:

தளபதி 65 படத்தை இயக்கும் வாய்ப்பு யாருக்கு அதிகம் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

தளபதி 65

image

விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்று தினமும் ஏதாவது தகவல் வெளியாகி வருகிறது. மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தை சுதா கொங்கரா இயக்கப் போகிறார் என்பது அதற்குள் பழைய செய்தியாகிவிட்டது. தற்போது வேறு ஒரு இயக்குநரின் பெயர் விஜய்யுடன் சேர்ந்து அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

அட்லி

image

படம் எடுத்தால் விஜய் அல்லது அஜித்தை வைத்து தான் எடுப்பேன் என்று அடம்பிடிப்பவர் அட்லி. அவர் நேரம் விஜய்யை வைத்து படம் எடுக்க பலர் வரிசையில் காத்திருக்க மூன்று படங்களை இயக்கி முடித்துவிட்டார். 3 படங்களில் விஜய்யை வேலை வாங்கியது அட்லிக்கு போதவில்லையாம். மீண்டும் விஜய்யை இயக்க காத்திருக்கிறார். அவரின் ஆசை மீண்டும் நிறைவேறப் போகிறது.

சன் பிக்சர்ஸ்

image

என்னாது, மறுபடியும் அட்லி விஜய்யை வைத்து படம் எடுக்கிறாரா என்று ஷாக் எல்லாம் ஆக வேண்டாம். அவர் தான் தளபதி 65 படத்தை இயக்கப் போகிறாராம். தளபதி 65 படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் அட்லிக்கு வாய்ப்பு அளிக்க விரும்புகிறதாம். அட்லி ஷாருக்கானை வைத்து படம் பண்ண தயாராகி வருகிறார். ஆனால் அது தாமதம் ஆகிக் கொண்டிருக்கிறது. அந்த கேப்பில் விஜய் படத்தை பண்ண திட்டமிட்டுள்ளாராம் அட்லி.

கதை

image

விஜய் பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார். அட்லி இம்முறை எந்த படத்தின் கதையை சொல்லி இம்பிரஸ் செய்தாரோ என்று நெட்டிசன்கள் தற்போதே பேச ஆரம்பித்துவிட்டனர். அட்லி படம் எடுக்கிறார் என்றால் ஒரு வேளை அது நம் கதையாக இருக்குமோ என்று இயக்குநர்களுக்கும் லைட்டா பயமாகத் தான் உள்ளது என்று கோடம்பாக்கத்தில் சொல்லிச் சிரிக்கிறார்கள்.

Source: samayam

More from திரையுலகம்More posts in திரையுலகம் »