Press "Enter" to skip to content

ட்விட்டரில் பிரபலமாகும் #கந்துவட்டிரஜினி: நண்பர்களுக்கு யாராச்சும் வட்டிக்கு கொடுப்பாங்களா?

Samayam Tamil | Updated:

நெருங்கிய நண்பர்களுக்கு ரஜினி வட்டிக்கு கடன் கொடுத்த தகவல் வெளியானதையடுத்து #கந்துவட்டிரஜினி என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.

ரஜினிகாந்த்

image

2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை ரஜினி வட்டிக்கு பணம் கொடுத்தது தெரிய வந்துள்ளது. அதை தொழிலாக செய்யவில்லை என்றும், நெருங்கிய நண்பர்களுக்கே வட்டிக்கு கடன் கொடுத்ததாகவும் ரஜினிகாந்த் வருமான வரித்துறையிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் மீது வருமான வரித்துறை தொடர்ந்த 3 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கந்துவட்டி ரஜினி

image

வருமான வரித்துறையிடம் ரஜினி அளித்த விளக்கம் குறித்து அறிந்த பிறகு #கந்துவட்டிரஜினி என்கிற ஹேஷ்டேகில் பலரும் ட்வீட் செய்து அதை ட்விட்டரில் டிரெண்டாக்கவிட்டுள்ளார்கள். எல்லார்ட்டயும் இருந்து “சேட்டு” வட்டி வாங்கிட்டு இருக்கும் போது, ஒருத்தன் மட்டும் “சேட்டு கிட்டயே” வட்டி வாங்கிட்டு இருந்தான்.

#கந்துவட்டிரஜினி என்று நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள்.

கந்துவட்டி

image

சிஸ்டம் சரியில்லை என்று கூறிய ரஜினி கட்சி துவங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். இந்நிலையில் வட்டி விஷயம் வெளியானதும் மக்கள் அவரை கிண்டல் செய்கிறார்கள். ரஜினி ரசிகர்கள் சிலரே அவர் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

நண்பர்கள்

image

அது எப்படி நண்பர்களுக்கு போய் வட்டிக்கு பணம் கொடுப்பது என்று சமூக வலைதளவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வட்டின்னா என்ன?

image

பொருட்களை அடமானம் வைத்து பணம் பெறுவதை தான் வட்டி என தான் நினைத்திருந்ததாக ரஜினிகாந்த் வருமான வரித்துறையினரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு தான் இப்படி கிண்டல் செய்கிறார்கள்.

‘தாலினா என்னனு தெரியாத சின்னதம்பி பிரபு மாதிரி வட்டினா என்னனு தெரியாத பெரிய தம்பி ரஜினி.

தெரியாம கைமாத்துக்கு 18% வட்டி வாங்கியிருக்கிறார் மனுசன். அதுவும் நண்பர்களிடம்..

இந்த உலகத்தில் இப்படியா அப்பாவியா இருக்கது..’

#கந்துவட்டிரஜினி

Source: samayam

More from திரையுலகம்More posts in திரையுலகம் »