Press "Enter" to skip to content

கெத்தா, வெத்தா?: டகால்டி விமர்சனம்

சந்தானம் ஹீரோவாக நடிக்கிறார் என்றால் அந்த படத்தில் என்ன எதிர்பார்க்கலாம் என்பது நமக்கே தெரிகிறது. அவரின் பாடி லேங்குவேஜ், ஒன் லைனர்கள் என்று அனைத்தும் பழைய மாதிரியே தான் உள்ளது. டகால்டி படத்தின் திரைக்கதை ரொம்பவே வீக். தியேட்டருக்கு செல்பவர்களின் பொறுமையை சோதிக்கிறது டகால்டி.

மும்பையை சேர்ந்த பெரும் பணக்காரர் விஜய் சாம்ராட் (தருண் அரோரா) ஒரு பெண்ணின் ஓவியத்தை தனது அடியாட்களிடம் கொடுத்து அவரை கண்டுபிடிக்கச் சொல்கிறார். அந்த பெண்ணை கண்டுபிடிக்க ரூ. 10 கோடி வரை செலவு செய்ய விஜய் சாம்ராட் தயாராக உள்ளார். பெண்ணை கண்டுபிடிக்கும் வேலையை உள்ளூர் ரவுடியான பாய்(ராதாரவி) ஃபிராடு குருவிடம் (சந்தானம்) கொடுக்கிறார்.

சந்தானம் அந்த பெண்ணை தேடி மும்பையில் இருந்து திருச்செந்தூருக்கு செல்கிறார். ஓவியத்தில் இருக்கும் பெண் மல்லி(ரித்திகா சென்) என்பதை சந்தானம் கண்டுபிடிக்கிறார். அப்பாவியான ரித்திகா சென்னுக்கு பெரிய இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது. இதையடுத்து சந்தானம் பாலிவுட் பத்தில் வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்று கூறி ரித்திகா சென்னை வில்லன் தருணிடம் ஒப்படைக்கிறார்.

அதன் பிறகு சந்தானம் தன் தவறை உணர்ந்து ரித்திகாவை காப்பாற்ற தன் நண்பன் உதவியுடன் தருணின் வீட்டிற்கு செல்கிறார். காட்சிகளில் லாஜிக்கே இல்லை. சந்தானத்தின் ஒன் லைனர்கள் கை கொடுக்கவில்லை. அவர் கதாபாத்திரம் சரியான முறையில் சித்தரிக்கப்படவில்லை. ஹீரோயின் கதாபாத்திரம் சுத்த வேஸ்ட். கோலிவுட்டிலேயே பெரிய லூசு பெண் இந்த மல்லி தான். லூசா இருக்கலாம் ஆனால் இந்த அளவுக்கு இருக்கக் கூடாது.

சந்தானம், யோகி பாபுவின் டகால்டி எப்படி?: ட்விட்டர் விமர்சனம்

வில்லன் தருண் ஒரு காமெடி பீஸ், வெயிட் இல்லை. யோகி பாபு, பிரம்மானந்தம் வரும் காமெடி ஓகே ரகம். சந்தானம், யோகி பாபு காம்பினேஷன் ஏமாற்றமே. டகால்டியை பார்த்து முடிப்பதற்குள் கண்ணை கட்டுது.

Source: samayam

More from திரையுலகம்More posts in திரையுலகம் »