Press "Enter" to skip to content

அந்த விஷயத்தில் ரஜினி ஏன் அமைதியா இருந்தார்னு அப்போ புரியல, இப்போ புரியுது

Samayam Tamil | Updated:

ரஜினிகாந்தை நெட்டிசன்கள் விடுவதாக இல்லை போன்று. பாவம் அநியாயத்திற்கு கலாய்க்கிறார்கள்.

வட்டித் தொழில்

image

ரஜினிகாந்த் மீது தொடர்ந்த மூன்று வழக்குகளை வருமான வரித்துறை வாபஸ் பெற்றுள்ளது. இந்நிலையில் பொருட்களை அடகு வைத்து பணம் பெறுவது தான் வட்டித் தொழில் என்று நினைத்திருந்தேன் என்று ரஜினி அளித்த விளக்கம் குறித்து விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் அவர் தன் நெருங்கிய நண்பர்களுக்கு 18 சதவீதம் வட்டிக்கு பணம் கொடுத்ததை தமிழக மக்கள் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ரஜினி

image

துக்ளக் விழாவில் கலந்து கொண்டதில் இருந்து ரஜினியை பற்றி தான் சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது. மீம்ஸ் கிரியேட்டர்களோ வாரக் கணக்கில் ரஜினியை வைத்து மீம்ஸ் போடுகிறார்கள். ஒவ்வொரு விஷயமாக வெளியே வருகிறது, ரஜினியிடம் பேச்சு கொடுத்தால் நிறைய வரும் என்று கிண்டல் செய்துள்ளனர்.

இப்போ புரியுது

image

அன்புச் செழியன் விஷயத்தில் ரஜினிகாந்த் அமைதியாக இருந்ததன் காரணம் தற்போது புரிகிறது என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

பியர் கிரில்ஸ்

image

மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தொடர்பாக ரஜினி ட்வீட் போட்டார். அதை பார்த்த பியர் கிரில்ஸ் அவரை பாராட்டி பதில் அளித்தார். பியர் கிரில்ஸின் கமெண்ட்டை பார்த்தவர்கள், நீங்கள் ரஜினியிடம் கடன் வாங்கவில்லை என்று நினைக்கிறோம். அவரிடம் வட்டி ஜாஸ்தி என்று தெரிவித்துள்ளனர்.

Source: samayam

More from திரையுலகம்More posts in திரையுலகம் »