Press "Enter" to skip to content

நியூசிலாந்து அணியின் சூப்பர் ஓவரின் சோகக்கதை!

இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டியில் சூப்பர் ஓவரில் இந்தியா அபார வெற்றி பெற்று 4 -0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்து அணி சூப்பர் ஓவரில் தோல்வி அடைவது என்பது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டியிலும் சூப்பர் ஓவரில் வெற்றியை கோட்டை விட்டது நியூசிலாந்து என்பது அனைவரும் அறிந்ததே

ஆனால் அதற்கு முன்னரே பலமுறை சூப்பர் ஓவரில் தோல்வியடையும் சோகம் நியூசிலாந்து அணிக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 12 ஆண்டுகளில் இதுவரை சூப்பர் ஓவரில் ஒரே ஒரு முறை மட்டுமே நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆறுமுறை சூப்பர் ஓவரில் அந்த அணி தோல்வி அடைந்தது தோல்வி அடைந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

நியூசிலாந்து அணியின் சூப்பர் ஓவர் தோல்விகள்:

டி-20 – எதிர்- வெஸ்ட் இண்டீஸ், ஆக்லாந்து, 2008 (தோல்வி)
டி-20 – எதிர்- இலங்கை, பல்லேகலே, 2012 (தோல்வி)
டி-20 – எதிர்- வெஸ்ட் இண்டீஸ், பல்லேகலே, 2012 (தோல்வி)
ஒருநாள் – எதிர்- இங்கிலாந்து, லார்ட்ஸ், 2019 (தோல்வி)
டி-20 – எதிர்- இங்கிலாந்து, ஆக்லாந்து, 2019 (தோல்வி)
டி-20 – எதிர்- இந்தியா, ஹாமில்டன், 2020 (தோல்வி)
டி-20 – எதிர்- இந்தியா, வெலிங்டன், 2020 (தோல்வி)

கடந்த 2010ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு நடைபெற்ற டி20 போட்டியில் மட்டுமே கடந்த 12 ஆண்டுகளில் நியூசிலாந்து அணி வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
The post நியூசிலாந்து அணியின் சூப்பர் ஓவரின் சோகக்கதை! appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

More from திரையுலகம்More posts in திரையுலகம் »