Press "Enter" to skip to content

சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு…

தினமும் சாம்பார் சாதம் சாப்பிட்டு போரடிச்சு போச்சுதா?! காரசாரமான ஒரு காரக்குழம்பை சாப்பிட்டா எப்படி இருக்கும்?! நல்லா இருக்கும்ல!! அப்படி ஒரு குழம்பின் செய்முறையைதான் இன்னிக்கு பார்க்கப்போறோம்.. இந்த குழம்பு செய்ய வயலட் நிற கத்தரிக்காய்தான் சிறந்தது

தேவையான பொருட்கள்

மசாலா அரைக்கசமையல் எண்ணெய் 1 மேஜைக்கரண்டிசின்ன வெங்காயம் 12 ( பொடியாக நறுக்கியது)தக்காளி 2 ( பொடியாக நறுக்கியது)பூண்டு 8 பற்கள் ( பொடியாக நறுக்கியது)இஞ்சி 1 இன்ச்மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டிகொத்தமல்லி தூள் 1 மேஜைக்கரண்டிவரமிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டிகுரு மிளகு 1 தேக்கரண்டிபச்சை மிளகாய் 3 ( அம்மிகல்லில் நசுக்கியது)தேங்காய் துருவல் 2 மேஜைக்கரண்டிசீரகம் 1 தேக்கரண்டிசோம்பு 1 தேக்கரண்டிமுழு முந்திரி பருப்பு 8

குழம்பு வைக்கஎண்ணெய்- 6 மேஜைக்கரண்டிகடுகு 1/4 தேக்கரண்டிவெந்தயம் 1/4 தேக்கரண்டிவரமிளகாய் 2கறிவேப்பிலை 1 கைப்பிடிசின்ன வெங்காயம் 14புளி 1 எலுமிச்சம்பழ அளவுபொடித்த வெல்லம் 1 மேஜைக்கரண்டிஉப்பு தேவையான அளவுபிஞ்சு கத்திரிக்காய் 10

செய்முறைஅடுப்புல அடிக்கனமான வாயன்ற பாத்திரத்தினை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு பற்களை சேர்க்கவும் , பின்பு அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கொத்தமல்லி தூள், நசுக்கிய பச்சை மிளகாய், மற்றும் மிளகு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து,வதக்கவும். அதில் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து நன்றாக ஆற விட்டு, அதனுடன் முந்திரி பருப்பு, தேங்காய் துருவல், சீரகம் மற்றும் சோம்பு சேர்த்து அரைத்து, அதனுடன் தேவையான அளவிலான தண்ணீர் சேர்த்து நன்றாக நைசாக விழுதாக மையாக அரைத்து கொள்ளவும்.

மரச்செக்கு கடலை எண்ணெய் சேர்த்து இக்குழம்பினை செய்தால் ருசி கூடும்.

பிஞ்சு கத்திரிகாயின் காயின் காம்பை நீக்கி, முழுவதுமாகா வெட்டாமல் நான்கு பகுதிகளாக வெட்டிக்கொள்ளவும். அதனுள் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சிறிது ஸ்பூன் கொண்டு ஊற்றி நிரப்பவும். வாணலியை அடுப்பில் வைத்து அதில் 4 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மசாலா கலவை நிரப்பபட்ட பிஞ்சு கத்திரிகாயை காய்ந்த எண்ணெய்ல போட்டு நன்றாக சிறுதீயில் பொன்னிறமாக ஆகும் வரை , கத்திரிகாய் உடைந்து விடாமல் வதக்கவும். கத்திரிகாயின் அனைத்து பகுதிகளும் காய்ந்த எண்ணெய் பட்டு வேகவிடவும். நன்றாக பொன்னிறமாக வதக்கிய பின்னர் அதை ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அதே வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து வெடிக்க ஆரம்பித்ததும், அதில் வெந்தயம், கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்க்கவும், மீதமுள்ள அரைத்த மசாலா கலவையை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். புளியை கரைச்சு . மசாலா கலவையில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வேலையில் புளி கரைசலை ஊற்றி , அதனுடன் தேவையான அளவிலான தண்ணீர் மற்றும் பொடித்த வெல்லம், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். குழம்பு நன்றாக கெட்டியானதும் அடுப்பை அணைத்து விட்டு சுடுசாதத்துடன் பரிமாறவும்.

மண் சட்டியும், மரச்செக்கு எண்ணெயினையும் பயன்படுத்தினால் குழம்பு கூடுதல் சுவையுடன் இருக்கும்.
The post சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு… appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

More from திரையுலகம்More posts in திரையுலகம் »