Samayam Tamil | Updated:
சனம் ஷெட்டி தர்ஷன் மீது புகார் தெரிவித்துள்ள நிலையில் பிக் பாஸ் 3 பார்வையாளர்கள் வனிதா விஜயகுமாரை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
சனம் ஷெட்டி
பிக் பாஸ் 3 பிரபலம் தர்ஷன் தன்னை உடலாலும், மனதாலும் கொடுமைப்படுத்தியதாக நடிகை சனம் ஷெட்டி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சனமுடன் நிச்சயதார்த்தம் எல்லாம் நடந்த பிறகு தான் தர்ஷன் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக மட்டுமே அவர் தெரிவித்தார். இந்நிலையில் சனம் புகார் அளித்துள்ளதை பார்த்த பிக் பாஸ் பார்வையாளர்கள் வனிதாவை பாராட்டுகிறார்கள்.
வனிதா விஜயகுமார்
தர்ஷன் பற்றி வனிதா அக்கா அப்போ கூறியதன் அர்த்தம் தற்போது தான் புரிகிறது என்று பிக் பாஸ் 3 பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். சாரிக்கா, உங்களை தவறாக புரிந்து கொண்டுவிட்டோம் என்று சிலர் வருத்தம் கூட தெரிவித்துள்ளனர். தனக்கு சனமுடன் நித்சயதார்த்தம் முடிந்தது தெரிந்த உடன் ஷெரின் பேசுவதே இல்லை என்று தர்ஷன் கூறியதை பிக் பாஸ் பார்வையாளர்கள் நம்பத் தயாராக இல்லை.
தர்ஷன்
தான் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது சனம் ஷெட்டி தனது முன்னாள் காதலருடன் இரவு முழுவதும் பார்ட்டி செய்ததாக தர்ஷன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதை பார்த்த பிக் பாஸ் 3 பார்வையாளர்கள் சிலர், இதை நீ சொல்லுவன்னு எதிர்பார்த்தோம் தர்ஷா என்று கூறியுள்ளனர். நீங்கள் பேட்டி கொடுத்த விதத்தை பார்த்தாலே பிளான் பண்ணி தெளிவாக பேசியது என்பது தெளிவாகத் தெரிகிறது என்கிறார்கள்.
கவின் ஆதரவாளர்கள்
சனம் ஷெட்டி கூறியதை தர்ஷன் ஆதராவளர்கள் நம்பவில்லை. இந்நிலையில் சனம் ஷெட்டி தர்ஷனின் உண்மையான முகத்தை காட்டிவிட்டதாக கவின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தால் கவின் ஹேப்பியாக இருக்கிறாரோ இல்லையோ நாங்கள் ரொம்ப ஹேப்பி என்று கூறியுள்ளனர். தர்ஷன் பேட்டி முடிந்துவிட்டது அடுத்து சனம் என்ன சொல்லப் போகிறாரோ என்று பலரும் காத்திருக்கிறார்கள்.
Source: samayam