Press "Enter" to skip to content

முருகனாக மாறிய யோகிபாபு: வேணா, ஜாக்கிரதை, அழிவு ஆரம்பம்னு திட்டும் இணையப் பயனாளர்கள்

முருகனாக மாறிய யோகிபாபு: வேணா, ஜாக்கிரதை, அழிவு ஆரம்பம்னு திட்டும் நெட்டிசன்ஸ்
விஜய முருகன் இயக்கத்தில் யோகி பாபு, அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் காக்டெய்ல். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் யோகி பாபு முருகன் போன்று வேடமிட்டு போஸ் கொடுத்துள்ளார்.

போஸ்டர் சிலருக்கு பிடித்துள்ளது, பலருக்கு பிடிக்கவில்லை. யோகி பாபுவை முருகன் கெட்டப்பில் பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

இந்து கடவுளை அவமதிக்க வேண்டாம். இந்த போஸ்டரை உடனே நீக்க வேண்டும். இல்லை என்றால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். உங்களின் இமேஜை டேமேஜ் செய்து கொள்ள வேண்டாம் யோகி பாபு.

#Cocktail https://t.co/mUjv5j9r7B

— Yogi Babu (@yogibabu_offl)

1580702275000

சத்தியமா இதை எதிர்பார்க்கவே இல்லை தனுஷ்

தமிழ் கடவுளை கிண்டல் செய்கிறீர்களா?. முருகன் வேடமிடும் முன்பு கொஞ்சம் யோசிக்க வேண்டாமா?. தேவையில்லாத வேலை. உங்களுக்கு இது சரிபட்டு வராது. படத்தை தியேட்டரில் பார்க்கட்டுமா இல்லை ஆன்லைனிலா?.

எல்லாம் எங்கள் தலையெழுத்து, இந்த கொடுமையை எல்லாம் பார்க்க வேண்டி இருக்கு. யோகி பாபு இது நல்லதுக்கு இல்லை, சொல்லிட்டோம். உங்கள் அழிவு காலம் துவங்கிவிட்டது என்று தெரிவித்துள்ளனர்.

பர்த்டே பாய் சிம்பு பற்றிய 5 ரகசியங்கள் தெரியணுமா?

யோகிபாபு முருகன் வேடமிட்டது பலருக்கும் பிடிக்கவில்லை. ஒரு சிலரே போஸ்டர் அருமை, வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளனர். ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறதே.

Source: samayam

More from திரையுலகம்More posts in திரையுலகம் »