Press "Enter" to skip to content

நினைவாற்றலை கூட்டும் வல்லாரை துவையல் – அடுப்பங்கரை!!

சில பிள்ளைகள் பொழுதன்னிக்கும் விழுந்து விழுந்து படிப்பாங்க. ஆனா, பரிட்சையில் குறைவா மார்க் வாங்கி வருவாங்க. ஏன்னு கேட்டா படிக்குறதுலாம் மறந்திடுதும்மான்னு சொல்வாங்க. அப்படி மறக்காம இருக்க நினைவாற்றலை கூட்ட வல்லாரை பெரும் உதவி செய்கின்றது. வல்லாரையில் கூட்டு, சட்னி, சாம்பார், துவையல், பொடின்னு செஞ்சு சாப்பிடலாம்.

இன்னிக்கு வல்லாரை துவையல் செய்வது எப்படின்னு பார்க்கலாம்!!

தேவையான பொருட்கள்.:

வல்லாரைக்கீரை – ஒரு கட்டு

உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்,

சின்ன வெங்காயம் – 10,

புளி – சிறிதளவு,

சீரகம் – கால் டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் – 4,

தேங்காய்த் துருவல் – ஒரு கைப்பிடி அளவு,

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,

கடுகு,

நல்லெண்ணெய்,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை.:வாணலியில் எண்ணெய்விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சீரகம் சேர்த்து வறுக்கவும்.அதனுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய், வல்லாரை கீரை, தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறிய பின் புளி, உப்பு சேர்த்து துவையலாக அரைக்கவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு கடுகு, வெள்ளை உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து துவையலுடன் கலந்து பரிமாறவும்.

The post நினைவாற்றலை கூட்டும் வல்லாரை துவையல் – அடுப்பங்கரை!! appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

More from திரையுலகம்More posts in திரையுலகம் »