Press "Enter" to skip to content

என்னை எப்படி இயக்குவது என்று அவருக்கு தெரியவில்லை – கல்யாணி பிரியதர்ஷன்

ஹீரோ படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கல்யாணி பிரியதர்ஷன், என்னை எப்படி இயக்குவது என்று அவருக்கு தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.

தெலுங்கில் விக்ரம் குமார் இயக்கத்தில் அகில் நடித்த ‘ஹலோ’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கல்யாணி பிரியதர்ஷன். அதனைத் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கின. இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனரான பிரியதர்ஷனின் மகள்தான் கல்யாணி பிரியதர்ஷன். 

தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ படத்தின் மூலம் கல்யாணி பிரியதர்ஷன் அறிமுகமானார். தற்போது மலையாளத்தில் துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘வரனே ஆவஷ்யமுண்டு’ படத்தின் மூலம் அறிமுகமானார். 

மேலும், பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மரைக்காயர்’ படத்தில் மோகன்லாலுடன் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். அந்த அனுபவம் குறித்து கூறும்போது, “அப்பாவுடன் பணியாற்றினால் நான் அதிகம் பயப்படுவேன் என்று அவருக்குத் தெரியும். அவரது படத்தில் நான் சில நாட்கள் கவுரவ வேடத்தில் நடித்தேன். எனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு சில வசனங்களே எனக்குக் கஷ்டமாக இருந்தன.

என்னை எப்படி இயக்குவது என்பது அவருக்கும் பிடிபடவில்லை. அவரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு எப்படி நடிப்பது என்பது எனக்கும் புரியவில்லை. நான் வசனங்களை மறந்துவிட்டேன் என்று சத்தம் போட்டார். ஆனால் நான் வசனங்களை மறக்கவில்லை. பதற்றம்தான். ‘உன் முதல் ஐந்து படங்கள் வரை நாம் இருவரும் சேர்ந்து பணியாற்றக் கூடாது. ஏனென்றால் அது உனக்கு அதிக அழுத்தத்தைத் தரும்’ என்றார். அவர் சொன்னது இப்போது எனக்குப் புரிகிறது” என்றார் கல்யாணி பிரியதர்ஷன்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »