Press "Enter" to skip to content

பேர குழந்தைகளிடம் ஆண்ட்ரியா சொல்ல போகும் கதை

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலம் குறித்து நமது பேரக் குழந்தைகளிடம் சொல்லுவோம் என்று ஆண்ட்ரியா கூறியுள்ளார்.

கொரோனா குறித்து நடிகை ஆண்ட்ரியா உருக்கமாக கூறியதாவது: ஒரு நாள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலம் குறித்து நமது பேரக் குழந்தைகளிடம் சொல்லுவோம். நமது வேலைகள், வழக்கமான காலை நடைப்பயிற்சி, நீண்ட தூரப் பயணம், பிடித்த உணவகங்களில் உணவு, திருமணங்கள், பிறந்தநாள் விழாக்கள், வீட்டுக் கொண்டாட்டங்கள், சுற்றுலா மற்றும் நமது உயிர்கள் என அனைத்துக்கும் அச்சுறுத்தல் இருந்த காலம். 

இந்த பித்துப் பிடிக்கும் சூழலை நாம் எப்படிக் கையாண்டோம் என்பதே அவர்கள் கேட்க விரும்பும் கதையாக இருக்கும். இவ்வளவு குழப்பத்துக்கு நடுவில் தனிமையில், ஒற்றுமையாக நாம் நல்லறிவைத் தேர்ந்தெடுத்தோமா, பொறாமையை விடுத்து பச்சாதாபத்தைத் தேர்ந்தெடுத்தோமா, பேராசையை விடுத்து பெருந்தன்மையைத் தேர்ந்தெடுத்தோமா?
இப்போது நாம் இரண்டு விஷயங்கள் செய்யலாம். 

ஒன்று கற்பனையாக அதைச் சொல்லலாம் அல்லது வாழ்ந்து காட்டலாம்.வீட்டிலிருந்தோம், சமூக ஊடகங்களால் சோர்வுற்றோம், சலித்துப் போய் படைப்பாற்றலோடு இருந்தோம், பால்கனிகளில் நின்று, வெளியே சேவை செய்து கொண்டிருப்பவர்களுக்காகப் பாடல் பாடினோம், கை தட்டினோம் என்று நாம் அவர்களுக்குச் சொல்லலாம்.
ஒரு புதிய நாளைப் பார்க்க நாம் உயிர் பிழைத்தோம் என்ற இந்தக் கதையைக் கெடுக்காதீர்கள்… இப்படிக்கு க்ளைமாக்ஸ்
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »