Press "Enter" to skip to content

ஆசிரியர் மாளவிகாவுக்கு டப்பிங் பேசிய பிரபல நடிகை

லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனனுக்கு பிரபல நடிகை டப்பிங் பேசியுள்ளார்.

விஜய்யின் 64-வது படம் `மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இவர், ‘மாநகரம்,’ ‘கைதி’ ஆகிய 2 படங்களை இயக்கியவர். சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ரஜினியின் பேட்ட படத்தில் நடித்திருந்தார். மாஸ்டர் படம் இம்மாதம் ரிலீசாக இருந்தது. கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

இந்நிலையில், மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனனுக்கு பிரபல நடிகை டப்பிங் பேசியுள்ளார். ஒரு கிடாயின் கருணை மனு படத்தில் நடித்த ரவீனா தான் மாளவிகாவுக்கு குரல் கொடுத்துள்ளார். இவர் ஏற்கனவே நயன்தாரா, காஜல் அகர்வால், அமலாபால், எமி ஜாக்சன் போன்ற முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஹீரோயினாக நடித்துள்ள காவல்துறை உங்கள் நண்பன் விரைவில் ரிலீசாக உள்ளது.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »