Press "Enter" to skip to content

ஓய்வின்றி உழைக்கும் அரசு மருத்துவர்களுக்கு உணவளித்த நடிகை

அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வரும் டாக்டர்களின் சேவையை பாராட்டி, அவர்களுக்கு நடிகை ஒருவர் உணவளித்து உதவியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்கும் பணியில் டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள், போலீசார், சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அவர்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல் தாங்கள் பணியாற்றி வரும் இடங்களிலேயே தங்கியிருந்து இரவு-பகலாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 

இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வரும் டாக்டர்களின் சேவையை பாராட்டி நேற்று கன்னட திரையுலகின் பிரபல நடிகையான ராகினி திவேதி தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சப்பாத்தி, குருமா தயாரித்து அதனை பார்சல் கட்டி நேரில் சென்று வழங்கினார். மொத்தம் 150 அரசு டாக்டர்களுக்கு அவர் சப்பாத்தி வழங்கியுள்ளார். 

இதனை நடிகை ராகினி திவேதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே எலகங்கா பகுதி துப்புரவு தொழிலாளர்களுக்கு அவர் கையுறைகள், முகக்கவசம் வழங்கியதுடன் உணவு பொருட்களையும் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »