Press "Enter" to skip to content

‘அலாதி அன்பிருந்தால் அனாதை யாருமில்லை’…. மிகுதியாகப் பகிரப்படும் கமலின் கொரோனா விழிப்புணர்வு பாடல்

எழுதி, இயக்கி திரைப்பிரபலங்களுடன் கமலும் பாடியுள்ள “அறிவும், அன்பும்” என்ற விழிப்புணர்வு பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திரைப்பிரபலங்கள் பலரும் வீட்டில் இருந்தபடியே சமூக வலைத்தளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன் எழுதி, இயக்கியுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடலை அவருடன் சேர்ந்து பிரபலங்கள் பலரும் பாடியுள்ளனர். 

 “அறிவும், அன்பும்”  என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்பாடலை கமல், ஸ்ருதி ஹாசன், அனிருத், சித்தார்த், தேவி ஸ்ரீ பிரசாத், சித் ஸ்ரீராம், சங்கர் மகாதேவன், பாம்பே ஜெயஸ்ரீ, யுவன் சங்கர் ராஜா, ஆண்ட்ரியா, லிடியன், முகேன் ஆகியோர் பாடியுள்ளனர். இன்று வெளியான அப்பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அப்பாடல் வரிகள் இதோ: “பொது நலமென்பது தனி மனிதன் செய்வதே. தன் நலமென்பதும் தனி நபர்கள் செய்வதே. அலாதி அன்பிருந்தால் அனாதை யாருமில்லை, அடாத துயர்வரினும் விடாது வென்றிடுவோம். அகண்ட பாழ் வெளியில் ஓர் அணுவாம் நம்முலகு. அதில் நீரே பெருமளவு நாம் அதிலும் சிறிதளவே.

சரி சமம் என்றிடும் முன்பு உனைச் சமம் செய்திடப் பாரு. சினையுறும் சிறு உயிர் கூட உறவெனப் புரிந்திடப் பாரு. உலகிலும் பெரியது உம், அகம் வாழ் அன்புதான்.. உலகிலும் பெரியது நம், அகம் வாழ் அன்புதான்.. புதுக்கண்டம், புது நாடு என வென்றார் பல மன்னர். அவர், எந்நாளும் எய்தாததை சிலர் பண்பால், உள்ளன்பால் உடன்வாழ்ந்து, உயிர் நீத்து, அதன் பின்னாலும் சாகாத உணர்வாகி உயிராகிறார்.

அழிவின்றி வாழ்வது நம் அறிவும், அன்புமே! சரி சமம் என்றிடும் முன்பு உனைச் சமம் செய்திடப் பாரு. சினையுறும் சிறு உயிர் கூட உறவெனப் புரிந்திடப் பாரு. அழிவின்றி வாழ்வது நம் அறிவும் அன்புமே!“

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »