Press "Enter" to skip to content

கொரோனாவால் சிறுவரவு செலவுத் திட்டம் பட அதிபர்களுக்கு லாபம்- சீனு ராமசாமி

வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி, கொரோனாவால் சிறுபட்ஜெட் பட அதிபர்களுக்கு லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார்.

கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் தியேட்டர்களும் மூடப்பட்டதால் சினிமா துறை கடும் இழப்பை சந்தித்துள்ளது. ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும், திரையரங்குகள் திறக்க ஓரிரு மாதங்கள் ஆகும் என்றே சொல்லப்படுகிறது. இதனால் சிறு பட்ஜெட் படங்களை ஓடிடி தளங்களில் நேரடியாக ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அந்தவகையில் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஆதரவு குரல்களும் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:  “OTT, இது விஞ்ஞான மாற்றம், இதை இப்போது விரைவுபடுத்தியிருக்கிறது கரோனா. சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு லாபம், நிறைய புதிய கலைஞர்கள், புதிய கதைகள் எனச் சினிமாவின் தரமும் உயரும், தியேட்டர் கிடைக்காமல் அவதிப்பட்டோரின் படங்களை உலகம் பார்க்கப் போகிறது என நினைக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

OTT இது விஞ்ஞான மாற்றம் இதை இப்போது விரைவுபடுத்தியிருக்கிறது கரோனா
சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு லாபம்,,நிறைய புதிய கலைஞர்கள், புதிய கதைகள் எனச் சினிமாவின் தரமும் உயரும்,தியேட்ட்ர் கிடைக்காமல் அவதிப்பட்டோரின் படங்களை உலகம் பார்க்கப் போகிறது என நினைக்கிறேன்

— Seenu Ramasamy (@seenuramasamy)

April 26, 2020

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »