Press "Enter" to skip to content

பாட்டுப்பாடி நிதி திரட்டும் அனிருத்

இசையமைப்பாளர் அனிரூத் கொரோனா நிவாரணத்துக்காக நிதி திரட்ட யூடியூப் நடத்தும் நேரலை இசை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திரைப்பிரபலங்கள் பலர் வீட்டில் இருந்தபடியே சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களது ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி விழிப்புணர்வு பிரச்சாரங்களும் மேற்கொள்கின்றனர். 

அந்த வகையில் இசையமைப்பாளர் அனிருத், யூடியூப் நடத்தும் நேரலை இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்று இரவு 8.52 மணிக்கு நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான பாடல்களை கேட்கலாம் என தெரிவித்துள்ளார். 

இந்த நிகழ்ச்சிக்கு “ஒன் நேசன்” என்று தலைப்பு வைக்கபட்டுள்ளது. இந்த நேரலையில் இந்தியாவின் பிரபலமான யூடியூப் பிரபலங்கள் மற்றும் பல முக்கிய கலைஞர்களும் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இந்த நேரலை இசை நிகழ்ச்சியின் மூலம் வசூலாகும் பணத்தை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கபட்டவர்களுக்கு அளிக்க உள்ளனர்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »