Press "Enter" to skip to content

பிரபுதேவா இயக்கத்தில் நயன்தாரா நடிக்கிறாரா? – தயாரிப்பாளர் விளக்கம்

பிரபுதேவா இயக்கத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக செய்திகள் பரவிவரும் நிலையில், அதுகுறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

பிரபுதேவா இயக்கத்தில் விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடித்துவந்த படம் ‘கருப்புராஜா வெள்ளைராஜா’. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஒப்பந்தமானார். கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்ற நிலையில், சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது. 

இதனிடையே, இப்படத்தை மீண்டும் தொடங்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் இயக்குனர் பிரபுதேவா முடிவு செய்திருப்பதாகவும், இப்படத்தில் நயன்தாராவையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் பரவின.

இந்நிலையில், அதுகுறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: ‘கருப்புராஜா வெள்ளைராஜா’ படம் மீண்டும் உருவாகவில்லை. அதுகுறித்து பரவிவரும் செய்திகள் உண்மையில்லை. அது அடிப்படை ஆதாரமற்ற வதந்தி” என கூறியுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை ஐசரி கணேஷ் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »