Press "Enter" to skip to content

தி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் – சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்

பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்துக்கு விருது அறிவிக்கப்பட்டதை கேலி செய்த தி.மு.க எம்.பி.க்கு பார்த்திபன் டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்திருந்த ஒத்த செருப்பு படத்திற்கு அண்மையில் மத்திய அரசு விருது அறிவித்திருந்தது. இதற்கு திமுக எம்.பி. செந்தில்குமார் “அண்ணனுக்கு பாஜகவுல ஒரு சீட் பொட்டலம்” என டுவிட் போட்டிருந்தார்.

அதனால், அதிருப்தியடைந்த பார்த்திபன், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுக்கடுக்கான டுவிட்டுகளை போட்டு வந்தார். நடிகர் உதயநிதி ஸ்டாலின் இடையில் புகுந்து வருத்தம் தெரிவித்ததால், பார்த்திபன் இந்த விவகாரத்தை அத்துடன் முடித்துக்கொண்டார்.

பார்த்திபனின் பதிலடி டுவிட்டுகள்: ‘இரவின் நிழல்’ என்ற சவால்மிகு திரைப்படம் உருவாக்குவதைத் தவிர, வேறெந்த கட்சிக்குள்ளும் காட்சி தரும் எண்ணம் எனக்கில்லை! நாளையே மழை வரலாம், வரும்வேளை குடை மலரலாம். அதற்காக வானிலை அறிக்கை கேட்கும் போதே ஜலதோஷம் பிடித்து விட்டதாக மூக்கை சீந்த வேண்டிய அவசியமில்லை! (மலரும் என்ற வார்த்தைப் பிரயோகத்தால் தாமரையைக் கருப்பாக கற்பனை செய்ய வேண்டாம். அது ஒரு கொக்கி வார்த்தை.

பாரா’ளுமன்ற உறுப்பினர் திருமிகு Dr S செந்தில்குமார் அவர்கள் “அண்ணனுக்கு பாஜாக-வுல ஒரு சீட் பொட்டலம்” என்று sweet-ஆக tweet-ட்டிருக்கிறார். செகு அண்ணனுக்கு நான் நன்றியை பொட்டலம் செய்வதற்குள் அவரது comment box-ல் நிரம்பி வழிகிறது வசவுகள்! தொகுதி மேம்பாட்டுக்கு பயன்படும் நேரத்தில் கீழ்தரமான comment போட்டதால், இணையப் பயனாளர்கள் மீம்போட்டு மேம்பாட்டு பணியில் அசிங்கப்படுத்துகிறார்கள் அவரை. 

அதில்லொன்று ‘MP அண்ணனுக்கு ஒத்த செருப்பு பொட்டலம்’ என்பதெல்லாம் அநாகரீகம். நாமும் அப்படி கீழிறங்கக்கூடாது. sorry for that)அவர் படம் பார்க்கவில்லை என்றால் Netflix-ல் பார்க்கலாம் அல்லது ஒரு DVD பொட்டலம் செய்யலாம். திருச்சி பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை. இவன் ‘ படத்தில் “seat குடுத்தா நிப்பீங்களா?”என என்னிடம் கேட்க,“ Seat குடுத்தா ஏன் நிக்கனும்? உக்காரலாமே?’என இன்றுவரை joke-க்கி விட்டு மட்டும் நகர்கிறேன். 

திரைப்படத்தில் இன்னுங்கொஞ்சம் stand செய்ய வேண்டும் என்பதால் வேறு எங்கும் நிற்பதில்லை எதிலும் சேர்வதில்லை. மற்றபடி மக்கள் பணிகளில் ஆர்வமுண்டு ஆனால் அதற்கு பெயர்தான் அரசியலா? என அறியாதவன் அடியேன்! உண்மையான நேர்மையான சுய சிந்தனையிலும் சுய வருமானத்திலும் கடுமையான உழைப்பிலும் உருவான ஒத்த செருப்புக்கு தகுதியின் அடிப்படையில் மட்டுமே கிடைக்கும் விருதினைக் கொச்சைப்படுத்தினால் மனம் வலிக்கும்! 

உரியது கிடைக்காதபோது ஆனந்த’மாய் தூக்கி எறிந்து விட்டு மேடை இறங்குவேனேத் தவிர, அதைத் “தா” இதைத் “தா” வென மரை’முகமாக என் முகம் மலரமாட்டேன்! அரசியலில் மோதிப் பார்க்கலாம் என முடிவெடுத்து விட்டால் அதை பேராண்மையுடன் செய்வேன். உசுப்’பேத்தாதீங்க பாஸ்!

கடைசியாக வந்த செய்தி: சூரியன் உதிக்குமுன் கண் விழித்த எனக்கு, திமுகவின் நம்பிக்கை நட்சத்திரமும், உடன்பிறப்புகளின் எதிர்கால நம்பிக்கையுமான என் நண்பர் திரு உதயநிதி ஸ்டாலின் அச்செய்திக்கு வருத்தம் தெரிவித்து எனக்கு ஒலிப்பதிவு செய்துள்ளதை கேட்டேன். அவருடைய பெருந்தன்மையைக் கண்டு என் கோப வார்த்தைகளை மேற்படி கோடிட்ட இடங்களாக மாற்றினேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »