Press "Enter" to skip to content

தலையில் ரத்த காயங்களுடன் சிலம்பரசன்… மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்

தமிழ் திரைப்படத்தில் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகர் சிலம்பரசன், தலையில் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

சிலம்பரசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் மாநாடு. ஊரடங்கிற்கு முன்னர் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைத்து மாநாடு படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் நடந்தது. ஊரடங்கிற்குப் பின்னர் இந்தப் படவேலைகள் அப்படியே நின்றது. இதனால் சுசீந்திரன் இயக்கத்தில் 30 நாட்களில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்தார் சிம்பு.

தற்போது மீண்டும் மாநாடு படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் சிலம்பரசன். இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வை விளம்பர ஒட்டியை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். தலையில் தோட்டா (புல்லட்) பாய்ந்து ரத்த காயங்களுடன் சிம்பு இருக்கும் விளம்பர ஒட்டி வெளியாகி சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷினி நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா எஸ் ஏ சந்திரசேகர் மனோஜ் பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்து வருகிறார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »