Press "Enter" to skip to content

நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் திரிஷா படம்

நடிகை திரிஷா நடித்துள்ள திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 17 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தமிழ், தெலுங்கில் பல முன்னணி கதாநாயகன்க்களுடன் நடித்துள்ள இவர், மலையாளத்தில் அறிமுகமான படம் தான் ‘ஹே ஜூட்’. கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் திரிஷா, நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஷ்யாம் பிரசாத் இயக்கியிருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில், இப்படத்தை தற்போது தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். அதுவும் நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். இப்படம் வருகிற பிப்ரவரி 5-ந் தேதி ஓடிடி-யில் வெளியாக உள்ளது. நடிகை திரிஷா நடித்துள்ள படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »