Press "Enter" to skip to content

அருண் விஜய் படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் தனுஷுடன் நடித்து மிகவும் பிரபலமான நடிகை இணைந்திருக்கிறார்.

சாமி, சிங்கம், வேல், ஆறு, பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஹரி, அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், யோகிபாபு, கே.ஜி.எப். பட பகைவன் ராமச்சந்திர ராஜு, குக் வித் கோமாளி புகழ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

சமீபத்தில், தலைவாசல் விஜய் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தனுஷின் அசுரன் படத்தில் நடித்து மிகவும் பிரபலமான அம்மு அபிராமி இந்த படத்தில் இணைந்து இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »