Press "Enter" to skip to content

ஹிப்ஹாப் ஆதி இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு

மீசையை முறுக்கு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி அடுத்ததாக இயக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்‌ஷன் உள்பட பல படங்களுக்கு இசைமைத்துள்ளார். 

மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். இந்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், ஹிப்ஹாப் ஆதி இயக்கும் 2-வது படத்திற்கு சிவகுமாரின் சபதம் என்று தலைப்பு வைத்து முதல் பார்வை விளம்பர ஒட்டியை வெளியிட்டு இருக்கிறார்கள்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக நடிக்கிறார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »