Press "Enter" to skip to content

நீண்ட நாட்களுக்கு பின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ‘காடன்’ படக்குழு

பிரபு சாலமன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள காடன் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரபு சாலமன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘காடன்’. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ராணா, விஷ்ணு விஷால் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். நாயகியாக ஜோயா நடித்துள்ளார். 

3 இடியட்ஸ் படத்தின் இசையமைப்பாளர் சாந்தனு மொய்த்ரா இத்திரைப்படத்தில் இசையமைப்பாளராகவும், ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி ஒலி அமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர். இப்படம் வருகிற மார்ச் 26-ந் தேதி ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், காடன் படக்குழு பட விளம்பரம் வெளியீடு குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். யானையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளதால். உலக வனவிலங்கு தினமான, வருகிற மார்ச் 3-ந் தேதி இப்படத்தின் பட விளம்பரம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »