Press "Enter" to skip to content

பபூனாக மாறிய வைபவ் – மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்

தமிழில் ஈசன், மங்காத்தா, கோவா, மேயாதமான் படங்களில் நடித்து பிரபலமான வைபவ், தற்போது பபூனாக மாறி இருக்கிறார்.

ஈசன், மங்காத்தா, கோவா, மேயாதமான் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வைபவ். மேலும் நடிப்பில் ‘காட்டேரி’, ஆலம்பனா உள்ளிட்ட படங்கள் உருவாகியுள்ளது. தற்போது பபூன் என்ற படத்திலும் வைபவ் நடித்துள்ளார். இப்படத்தை அசோக் வீரப்பன் என்பவர் இயக்கியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் முதல் பார்வை விளம்பர ஒட்டியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »