Press "Enter" to skip to content

சானியா மிர்சா வாழ்க்கைக் கதை திரைபடம்கில் நடிக்கும் தனுஷ் பட நடிகை?

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கை திரைப்படம் படமாகிறது, இதனை ரோனி ஸ்குருவாலா தயாரிக்கிறார்.

விளையாட்டு நட்சத்திரங்கள் வாழ்க்கை குறித்து திரைப்படம் எடுப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி தடகள வீரர் மில்கா சிங், பாக்ஸிங் வீராங்கனை மேரி கோம், கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி ஆகியோரது வாழ்க்கைக் கதை திரைபடம் வெளியாகி வசூலில் சாதனை படைத்தன. தற்போது கபில்தேவ், மிதாலி ராஜ், சாய்னா நேவல், ஜூலன் கோஸ்வாமி, கர்ணம் மல்லேஸ்வரி போன்ற பிரபலங்களின் படங்கள் தயாராகி வருகின்றன. 

அதேபோல் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கைக் கதை திரைபடம்கும் உருவாக உள்ளது. ரோனி ஸ்குருவாலா தயாரிக்கும், இப்படத்தில் சானியா மிர்சா வேடத்தில் நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில், சானியா மிர்சா வேடத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை டாப்ஸியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை டாப்ஸி, தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கைக் கதை திரைபடம்கான ‘சபாஷ் மித்து’ எனும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »