Press "Enter" to skip to content

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் பிரபாஸ்?

நடிகர் பிரபாஸ், ஒவ்வொரு மொழியிலும் இருக்கும் திறமை வாய்ந்த இயக்குனர்களின் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம்

‘பாகுபலி’ படங்களுக்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமான நடிகராகிவிட்டவர் பிரபாஸ். இதனால் அவர் நடித்து வரும் படங்களை பான்-இந்தியா படமாகவே உருவாக்கி வருகின்றனர். மேலும், ஒவ்வொரு மொழியிலும் இருக்கும் திறமை வாய்ந்த இயக்குனர்களின் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் பிரபாஸ். 

அதன்படி தற்போது, கன்னடத்தில் ‘கேஜிஎப்’ என்ற பிளாக்பஸ்டர் ஆக்‌ஷன் படத்தை கொடுத்த பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தமிழ் திரையுலகின் அதிகமாக பகிரப் படும் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. 

பிரபாஸ், லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் பேச்சுவார்த்தை தற்போது ஆரம்பக் கட்டத்தில் உள்ளதாம். இவர்கள் இணைவது உறுதியானால் அடுத்த வருடம் மே மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்கிறார்கள். அதற்குள் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை லோகேஷ் முடித்துவிடுவார் எனவும் கூறப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »